Leo Censor: லியோவில் வெப் சீரிஸை மிஞ்சும் அளவில் Bad Words... சென்சாரில் ஏகப்பட்ட Beep Sound!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், ட்ரெய்லர் ரிலீஸை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே லியோ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், டிவிட்டரில் ட்ரெண்டாகும் லியோ சென்சார் சர்டிபிகேட் காப்பியால் ரசிகர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லியோ சென்சாரில் ஏகப்பட்ட Beep Sound
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன்ஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளது. லியோ கண்டிப்பாக விஜய் - லோகேஷ் கூட்டணியின் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் கடந்த வாரம் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதனால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து ரசிகர்களை கூல் செய்வதற்காக லியோ செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று லியோ ட்ரெய்லர் வெளியாகிறது.
இன்று மாலை லியோ ட்ரெய்லர் வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் செம்ம வைப்பில் உள்ளனர். இதனிடையே லியோ சென்சார் அப்டேட், ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகின. அதன்படி லியோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ்ஜும் தனது டிவிட்டரில் கன்ஃபார்ம் செய்திருந்தார்.
இதனையடுத்து லியோ படத்தின் சென்சார் சர்டிபிகேட் டிவிட்டரில் ட்ரெண்டானது. அதில், லியோவின் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட்டுடன், மேலும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது லியோ படத்தில் எந்தெந்த காட்சிகளில் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன, அது என்னென்ன வார்த்தைகள் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த வார்த்தைகளுக்குப் பதிலாக பீப் சவுண்டு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தன.
லியோ சென்சார் சர்டிபிகேட்டில் இருந்த வார்த்தைகள் எல்லாம், வெப் சீரிஸ்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்நிலையில் டிவிட்டரில் வைரலான லியோ சென்சார் சர்டிபிகேட் Fake எனவும் சொல்லப்படுகிறது. இது லியோவின் உண்மையான சென்சார் சர்டிபிகேட் இல்லையென்றும், படத்திற்கு நெகட்டிவ் ப்ரோமோட் செய்யும்விதமாக சிலர் இதனை ட்ரெண்டாக்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











