Leo Cheyyaru Balu Review: “விஜய்க்காக லோகேஷ் விட்டுக் கொடுத்துட்டார்..” லியோ செய்யாறு பாலு விமர்சனம்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியானது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் முதல் LCU படமாக லியோ உருவாகியுள்ளது.

இதனால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, விஜய்க்காக லோகேஷ் நிறைய விட்டுக்கொடுத்துவிட்டதாக லியோவுக்கு விமர்சனம் செய்துள்ளார்.

 Leo Cheyyaru Balu Review: Vijays Leo Movie Cheyyaru Balu Review

லியோ செய்யாறு பாலு விமர்சனம்
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து லியோவையும் LCU ஜானரில் இயக்கியுள்ளார் லோகேஷ். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியான லியோவுக்கு செம்ம ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு லியோ படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சிம்லாவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் பார்த்திபனை, இன்னொரு குடும்பத்தினர் இவன் லியோ தான் என விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், "நான் பார்த்திபன் தான் என்னை நம்புங்க" என விஜய் போராடுவதும், அதற்கான காரணமும் தான் லியோ ஒன்லைன் என கூறியுள்ளார். லியோவில் இத்தனை மல்டி ஸ்டார்ஸ் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், படத்தில் அவர்களில் பலர் வருவதும் போவதுமாக தான் நடித்துள்ளனர். இன்னும் சிலர் இருக்கிறார்கள்... இருந்துகொண்டே இருக்கிறார்கள் என கூறியுள்ளார். காஷ்மீரில் லோகேஷ் போட்ட உழைப்பு திரையில் அப்படியே தெரிவதாகவும், அங்கு எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் சீன்ஸ் மிரட்டலாக இருக்கிறது. ஆனால், எல்லா கேரக்டர்களும் நடிப்பதற்கான சான்ஸ் சுத்தமாக கொடுக்கவில்லை எனவும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

மிஷ்கின், சாண்டி மாஸ்டர் இருவரையும் செம்ம மிரட்டலாக ஸ்க்ரீனில் கொண்டு வரும் லோகேஷ், அவர்களை அப்படியே டீலில் விட்டுள்ளார். இவர்கள் தவிர ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் என ஒவ்வொருவராக வருகிறார்கள். இவர்களில் மன்சூர் அலிகான் மட்டும் தான் மனதில் நிற்பதாகவும் செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக விஜய் - த்ரிஷா இருவரின் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும், இருவரும் நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங் சீன் செம்ம எனவும், அதனை மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், படத்துடன் பார்க்கும் லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை தவறாக தெரியவில்லை எனவும், அது அந்த சீனுக்கு தேவையானது தான் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் சுத்தமாக எடுபடவில்லை. விஜய்க்காக லோகேஷ் கனகராஜ் அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். சஞ்சய் தத், அர்ஜுன், அனுராக் காஷ்யப் ஆகியோரின் கேரக்டருக்கான ஸ்பேஸ் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். ப்ரியா ஆனந்த் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை எனவும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

 Leo Cheyyaru Balu Review: Vijays Leo Movie Cheyyaru Balu Review

விஜய் ஆக்‌ஷனில் மட்டுமில்லாமல் எமோஷனல், சென்டிமெண்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். டெக்னிக்கலாக மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு, அனிருத்தின் பிஜிஎம், அன்பறிவ் மாஸ்டரின் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் மிரட்டலாக வந்துள்ளது. அதிகமான நடிகர்களை நடிக்க வைத்ததால் லியோ சில இடங்களில் சொதப்பியுள்ளதாகவும், மற்றபடி விஜய்யின் லியோ ரசிகர்களுக்கான ட்ரீட் எனவும் செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X