Leo Collection - வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் லியோ வசூல்.. கடல் தாண்டியும் தளபதி மாஸ்தான்

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Leo Collected 200 Crores in Foreign Countries Official Announcement

விஜய் நடிப்பு சூப்பர்: படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.

சக்சஸ் மீட்: லியோ படத்தின் சக்சஸ் மிட் சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார்.

ஜெயிலரை முந்திய லியோ: இந்த சூழலில் படக்குழு கடைசியாக வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் லியோ படமானது 545 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேசமயம் 600 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்திவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்.

Leo Collected 200 Crores in Foreign Countries Official Announcement

வெளிநாடுகளில் வசூல்: அதேசமயம் படக்குழு தரப்பிலிருந்து வசூல் குறித்து வேறு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X