Leo Controversy: “பக்கா தியேட்டர் மெட்டீரியல்... ஆனா சென்சாரில் சொதப்பல்..” தொடங்கியது லியோ சர்ச்சை

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸானது.

பான் இந்தியா படமாக வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

அதேநேரம் லியோவில் பல சொதப்பல்கள் இருப்பதாகவும் ட்ரோல்கள் வைரலாகி வருகின்றன.

மேலும், லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது போல, படத்திலும் சென்சார் கட் அதிகமுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளன.

 Leo Controversy: Leo several bad dialogues have been muted by the censors

லியோ சென்சாரில் சொதப்பல்?
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளதும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. லியோ FDFS விமர்சனம் பாசிட்டிவாக இருந்தாலும், அதன்பின்னர் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

விஜய்யின் டான்ஸ், ஆக்‌ஷன் சீன்ஸ் அனைத்தும் தாறுமாறாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் விஜய் தரமான ஃபேன்பாய் விருந்து கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் கலவை தான் லியோ எனவும் நெகட்டிவான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லியோவில் சென்சார் கட் அதிகமாக இருப்பதும் ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்துள்ளதாம்.

லியோ ட்ரெய்லர் வெளியான போது, அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை மிகப் பெரிய சர்ச்சையானது. விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் விஜய் போன்ற மாஸ் ஹீரோ கெட்ட வார்த்தை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தனர். அதன்பின்னர் லோகேஷ் கனகராஜ்ஜும் இந்த சம்பவம் பற்றி விளக்கம் கொடுத்திருந்தார். விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் லோகேஷ் கூறியிருந்தார்.

 Leo Controversy: Leo several bad dialogues have been muted by the censors

மேலும், லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை, படத்தில் இருக்காது எனவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, லியோ படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அதேபோல் இன்னும் ஏராளமான கெட்ட வார்த்தைகள் இருப்பதாகவும், அவையும் சென்சாரில் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் படம் பார்க்கும் போது அது தொந்தரவாக இருப்பதை போன்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

லியோ பக்கா தியேட்டர் மெட்டீரியல் படமாக இருந்தாலும், சென்சாரில் அதிகம் கட் விழுந்தது தான் போரிங் என ரசிகர்கள் ஃபீல் செய்துள்ளனர். இதனால் லோகேஷ் தனது அடுத்த படத்தில் கெட்ட வார்த்தைகள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X