Leo - காஷ்மீர் பறந்த லியோ படக்குழு.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: Leo (லியோ) லியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் பறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை,திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மாஸ்டரில் ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ் காட்டியிருந்ததால் லியோவிலும் அவ்வாறே நடக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் இருக்கின்றனர்.

அப்டேட்டுகள்: லியோ படத்திலிருந்து சிறு விஷயம்கூட லீக் ஆகாமல் பார்த்துக்கொண்டனர் படக்குழுவினர். இந்தச் சூழலில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடிதான் என்று விஜய் பாடிய பாடலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகின. பாடல் பெரும் வரவேற்பை பெற்று இளைஞர்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேசமயம் பாடலின் வரிகள் விமர்சனத்தையும் சந்தித்தன. எனவே பாடல் படத்தில் வரும்போது ஏதேனும் மாற்றத்துடன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்: அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் கையில் பெரிய சுத்தியலுடன் பற்கள் பறக்க ரத்தம் தெறிக்க தெறிக்க அந்த போஸ்டர் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது என கூறிவந்தனர். படத்தின் கதையும் கேங்ஸ்டர்களை மையப்படுத்தியதுதான் என்று ஷூட்டிங் ஆரம்பித்தபோதே தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன.
காஷ்மீர் பறந்த படக்குழு: இந்தச் சூழலில் லியோ படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வெளிநாடு பறந்த விஜய் விரைவில் இந்தியா திரும்பி தனக்கான டப்பிங் போர்ஷனை முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
காஷ்மீர் பறந்த படக்குழு: இந்நிலையில் லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் பறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்துக்கான பேட்ச் ஒர்க் இன்னமும் பாக்கி இருக்கிறது. அதனை முடிப்பதற்காகத்தான் காஷ்மீர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய காஷ்மீர் சுற்றுப்பயணத்தில் விஜய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்: முன்னதாக, படத்தின் மெயின் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி சமீபத்தில் அவரின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். பெரிய கழுகுக்கு கீழ் அவர் இருக்கும்படியும் வாயில் சிகரெட்டை புகைத்தபடியும் மாஸாக இருந்தார். அதனை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். அடுத்ததாக அர்ஜுன் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











