Leo Das & Co: "மிரட்டும் தாஸ் & கோ..” விஜய் ரசிகர்களை கலங்கடிக்கும் கூஸ்பம்ஸ் போஸ்டர்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து தாஸ் & கோ என்ற பெயரில் வெளியான மிரட்டலான போஸ்டர் ஒன்று, ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளது.
மிரட்டும் தாஸ் & கோ போஸ்டர்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. பான் இந்தியா படமாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் ப்ரொமோஷன் வேகமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் லியோ மூன்றாவது பாடல், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகின. லியோ ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தாலும், விஜய் பேசிய கெட்ட வார்த்தை பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதுமட்டும் இல்லாமல் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதுபற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் விளக்கம் கொடுத்திருந்தார்.
லியோ மூன்றாவது பாடல், ட்ரெய்லர் வரிசையில் கடைசியாக மல்டி ஸ்டார்ஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது தரமான போஸ்டர் ஒன்று வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. தாஸ் & கோ என்ற டைட்டில் தரமான போஸ்டராக இது உருவாகியுள்ளது.
இந்த போஸ்டரில் விஜய், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூவரும் செம்ம மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க ரெட் Shadow-இல் தெறி மாஸ்ஸாக வெளியாகியுள்ளது. ஆனால், இது படக்குழு வெளியிட்ட போஸ்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள இந்த ஃபேன்மேட் போஸ்டர், டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
லியோவில் விஜய் லியோ தாஸ் என்ற கேரக்டரிலும், சஞ்சய் தத் ஆண்டனி தாஸ், அர்ஜுன் ஹெரால்ட் தாஸ் ஆகிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். இதனால் லியோ, தாஸ் & கோ-ன் கேங் வார் மூவியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதனை எகிற வைக்கும் விதமாக தாஸ் & கோ போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











