இதுதான் ரியல் வெறித்தனம்! ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்.. பிவிஆர், புக் மை ஷோவில் ஒரே ரெட் கலர் தான் பாஸ்!
சென்னை: தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ நாளை மறுநாள் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாட காத்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென பிவிஆர் - ஐநாக்ஸ் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளன.
விஜய் ரசிகர்கள் அடிக்கடி வருவேன் என புக் மை ஷோ மற்றும் பிவிஆர் செயலிகளை செக் செய்துக் கொண்டே இருந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் முன் பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகாலை விடிவதற்குள்ளே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இன்று தீர்ப்பு: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளை ஒதுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், லியோ படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
7 மணி காட்சி கிடைக்குமா?: சிறப்பு காட்சி முதல் நாள் அன்று 4 மணிக்கும் மற்ற விடுமுறை நாட்களில் 7 மணி முதல் காட்சிகளை ஆரம்பிக்க வேண்டி தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் காட்சிகளுக்கான டிக்கெட் முன் பதிவு நேற்று இரவு திடீரென ஓபனாகி அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.
பிவிஆர் - புக் மை ஷோ ஹவுஸ்ஃபுல்: புக் மை ஷோ செயலில் கடந்த சில நாட்களாகவே சென்னை தியேட்டர்களின் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு பிவிஆர் மற்றும் புக் மை ஷோ ஆப்களில் சென்னை உள்ளிட்ட பல ஏரியாக்களின் முக்கிய மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவை நள்ளிரவு ஆரம்பித்த நிலையில், அதிரடியாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

பலே ஐடியா: அக்டோபர் 19ம் தேதிக்கான டிக்கெட்டுகளின் விற்பனையை மட்டுமே முதல் நாளில் தொடங்கி ஒட்டுமொத்த ஷோக்களையும் ஹவுஸ்ஃபுல் ஆக்கி உள்ளனர். இன்னும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட வார நாட்களுக்கான டிக்கெட் புக்கிங்கை தொடங்கவில்லை. அதன் காரணமாகவே விஜய் ரசிகர்கள் முழு வெறித்தனத்துடன் முதல் நாளே படத்தை பார்க்க அதிரடி காட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











