ஜெயிலர் என்னங்க.. ஷாருக்கான் பதானே காலி.. ஓவர்சீஸில் கெத்துக் காட்டும் தளபதி.. லியோ புக்கிங் ஃபயரு!

சென்னை: Leo Day 1 box office creates new record in UK - நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் இங்கிலாந்தில் ஆல் டைம் ரெக்கார்டு பிரேக் செய்திருப்பதாக அந்த படத்தை ஓவர்சீஸில் வாங்கி வெளியிடும் அஹிம்சா என் டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் தீயாக நடைபெற்று வருகிறது.

Leo Day 1 box office creates new record in UK - Ahimsa Entertainment

தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கி விட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங்கும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லி அடிக்கும் கில்லி: லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான அனைத்து படங்களின் வசூலையும் பீட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆல் டைம் நம்பர் ஒன்: இதுவரை இந்திய படங்கள் இங்கிலாந்தில் செய்த ப்ரீ புக்கிங் சாதனையை விஜய்யின் லியோ முறியடித்து ஆல் டைம் நம்பர் ஒன் இந்திய படமாக சாதித்திருப்பதாக அஹிம்சா நிறுவனம் தற்போது ட்வீட் போட்டுள்ளது. மேலும், இன்று மாலை அண்ணன் அதிரடி பாடல் ரிலீஸ் ஆகப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதானே காலி: ஜெயிலர் என்னப்பா ஜெயிலர், இந்த ஆண்டு இங்கிலாந்தில் அதிக வசூலை ஈட்டிய பதான் திரைப்படத்தின் முதல் நாள் யூகே பாக்ஸ் ஆபிஸையே பீட் செய்து லியோ முதலிடத்தை பிடித்துள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். இங்கிலாந்தில் சென்சார் கட் இல்லாமல் சிறுவர்கள் பார்க்காமல், பெரியவர்கள் மட்டுமே பார்க்கும் அளவுக்கு பக்கா ராவான படமாகவே லியோவை அஹிம்சா நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் சம்பவம்: இதுவரை நடிகர் விஜய் நடித்த படங்கள் 300 கோடி வசூலை தாண்டாத நிலையில், லியோ திரைப்படம் 600 கோடி வசூலை தாண்டினால் அது முழுவதும் லோகேஷ் கனகராஜ் சம்பவம் தான் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது விஜய் ரசிகர்களை வேற மாதிரி அட்டாக் பண்ண தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X