Leo official box office: ஜெயிலர் வசூலை முந்திய லியோ.. 12 நாளில் தரமான சம்பவம் செய்த தளபதி விஜய்!

சென்னை: ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 525 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leo Day 12 Official Box Office beats Jailer life time collection

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா சபாஸ்டியன், சாண்டி, மிஷ்கின், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், தினேஷ் மாஸ்டர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் நாள் வசூல் மற்றும் முதல் வார வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது 12வது நாள் வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நம்பர் ஒன் விஜய் தான்: இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகம், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக 525 கோடி ரூபாயை வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது. இந்நிலையில், அந்த வசூலை லியோ முறியடித்துள்ளது.

540 கோடி வசூல்: கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ முதல் வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், தற்போது இந்த இமாலய சாதனையை எட்டி உள்ளது.

விஜய் ரசிகர்கள் குஷி: ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லியோ தாண்டியதை அறிந்த விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். ஆனால், இதுவும் தயாரிப்பு நிறுவனம் சுட்ட வடை தான் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Leo Day 12 Official Box Office beats Jailer life time collection

வெற்றி விழாவில் சம்பவம்: நாளை லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ள நிலையில், நாளை இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே டிஜிட்டல் வாயிலாக லியோ படத்தின் 12 நாள் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3வது வார இறுதியிலும் லியோ படம் பிக்கப் ஆனால், 600 கோடி வசூல் வரை செல்லும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X