Leo box office collection day 4: தெறிக்க.. தெறிக்க இண்டஸ்ட்ரி ஹிட்.. 4 நாட்களில் லியோ வசூல் இவ்வளவா?
சென்னை: உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியான லியோ திரைப்படம் விஜயதசமி வீக்கெண்டில் சோலோ ரிலீஸாக செம ஸ்ட்ராங்காக இடம் பிடித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை வசூல் தாறுமாறாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று மாலையே தயாரிப்பு நிறுவனம் இண்டஸ்ட்ரி ஹிட் என்றே அறிவித்த நிலையில், அதற்குள் அதிவேகமாக இண்டஸ்ட்ரி ஹிட்டே லியோ அடித்து விட்டதா? என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் 300 கோடி வசூலை தாண்டிய நிலையில், 4 நாட்களில் அந்த படங்களின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்து விட்டு அடுத்து ஜெயிலர் சாதனையை முறியடிக்க லியோ சென்று கொண்டிருக்கிறது.
லியோ 4வது நாள் வசூல்: இந்தியா முழுவதும் 4வது நாளான ஞாயிற்றுக்கிழமை விஜய் நடித்த லியோ திரப்படம் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியதாக கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் தொடர்ந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் லியோவின் ஃபீவர் கொஞ்சம் கூட குறையாமல் அந்த ஏரியாக்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை உருவாக்கி உள்ளதாகவும் 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் 179 கோடி வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ நகர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் 100 கோடி: இதில், தமிழ்நாட்டில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் விமர்சனங்களை கடந்து அதன் வசூல் குவிந்து வருவது நடிகர் விஜய்யின் நடிப்பை பார்க்கத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
400 கோடியை நெருங்கிய லியோ: 3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 4வது நாளில் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாகவும் 390 முதல் 395 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை பெற்றிருப்பதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர் வசூல் கணக்கை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











