Leo Day 5 Box Office: 5 நாளில் 500 கோடியை நெருங்கிய லியோ.. சர்வதேச மார்க்கெட்டில் செம மாஸ்!

சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் 4 நாட்களில் 400 கோடி வசூலை முந்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஆயுத பூஜையான நேற்று விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் பெருமளவில் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலே பொய் என நடிகர் விஜய்யின் ஹேட்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக லியோ படத்தை பல பிரபல தியேட்டர்களில் நேற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக கண்டு ரசித்தனர்.

Leo Day 5 Box Office Collection will inches closer to 500 Crore Club

இன்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் இந்த தசரா விடுமுறையை இந்தியளவில் சரியாக பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தி உள்ளார் விஜய்.

உயர்ந்த சர்வதேச மார்க்கெட்: கமல்ஹாசனின் விக்ரம், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள், ஜெயிலர் மற்றும் லியோ என தொடர்ந்து தமிழ் சினிமாவின் வளர்ச்சி சர்வதேச மார்க்கெட்டில் உயர்ந்துக் கொண்டே செல்வது தமிழ் சினிமாவுக்கான வளர்ச்சி தான் என கொண்டாடி வருகின்றனர்.

லியோனார்டோவை தோற்கடித்த லியோ: டைட்டானிக் பட ஹீரோவான பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் கிங் மேக்கர் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய Killers of the Flower Moon படத்தின் வசூலையே லியோ முதல் வாரத்தில் முந்திய நிலையில், வெரைட்டி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் விஜய்யின் லியோ படத்தை பாராட்டி எழுதியுள்ளனர்.

Leo Day 5 Box Office Collection will inches closer to 500 Crore Club

இந்தியாவில் 200 கோடி: தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில், இந்தியா முழுவதும் 200 கோடி வசூலை 5 நாட்களிலேயே விஜயின் லியோ திரைப்படம் அள்ளி அசுர சாதனை படைத்திருப்பதாக கூறுகின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளில் படம் அசத்தி வருவது தான் இளைஞர்களை அதிகப்படியாக தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் ஹைனா சீன் மற்றும் குடும்பத்துக்காக போராடும் நாயகன் கதை என்பதால் இந்த ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை ரசிகர்கள் குடும்பத்துடன் லியோவை பார்த்து கொண்டாடி வருகின்றனர் எனக் கூறுகின்றனர்.

500 கோடியை நெருங்கும் லியோ: முதல் 4 நாட்களில் 405 கோடி வசூல் ஈட்டிய நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் 5வது நாளான நேற்று அதிகப்படியாக 70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 475 கோடி வசூலை லியோ வசூலித்து 500 கோடி கிளப்பில் இன்றைய வசூலுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வசூலுடன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை லியோ முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் வசூல் விவரத்தை இதுவரை வெளியிடவில்லை. இன்று அல்லது நாளை வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X