Leo Day 7 Box Office: 7வது நாளில் சரிவை சந்தித்த லியோ.. இந்த வார இறுதியில் மீண்டும் பிக்கப் ஆகுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை பார்க்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் காட்டிய ஆர்வம் தொடர்ந்து 6 நாள் விடுமுறை ஜாக்பாட்டால் இமாலய சாதனையை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை தங்கள் திரையரங்கில் முறியடித்து இருப்பதாக வெற்றி, ரோகிணி, காசி உள்ளிட்ட தியேட்டர்கள் ட்வீட் போட்டு வருகின்றன.

Leo Day 7 Box Office: Vijay starrer action drama slows down its run on week days

மேலும், புக் மை ஷோவிலும் லியோ 70 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், 7வது நாளான நேற்று வார நாட்களில் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் எந்தளவுக்கு சறுக்கியது, அதன் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

1000 கோடிக்கு வாய்ப்பில்லை: லியோ திரைப்படம் என்ன தான் முதல் நாளில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை முறியடித்து 148.5 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்பட்டாலும் அந்த படம் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பில்லை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரே உண்மையை ஓபனாக சொல்லி உள்ளார்.

Leo Day 7 Box Office: Vijay starrer action drama slows down its run on week days

500 கோடி வசூல்: லியோ திரைப்படம் 7 நாட்களில் 500 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை லலித் குமார் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். லியோ திரைப்படம் இதுவரை 516 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் 500 கோடி லியோ தொடவில்லை என்றும் தொட்டிருந்தால் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்து இருக்குமே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தியாவில் லியோ திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் 150 கோடி வசூல் வரை பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர்.

வார நாட்களில் சரிவு: திங்கட்கிழமை ஆயுத பூஜை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி என பண்டிகை நாட்கள் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், லியோ படம் இங்கே நல்ல வசூலை ஈட்டியுள்ளது. ஆனால், வார நாட்களில் மற்ற இடங்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து விட்டது. வியாழக்கிழமையான இன்றும் வெள்ளிக்கிழமையான நாளையும் மேலும் லியோ வசூல் பாதிக்கும் என்றும் மீண்டும் இந்த வார விடுமுறையில் லியோ படம் வசூல் வேட்டை நடத்தினால் தான் 600 கோடி வசூல் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X