LEO: விஜய்யின் லியோ ஸ்பாட்டில் தனுஷுக்கு என்ன வேலை... லோகேஷின் சீக்ரெட் மூவ் இதுதானா?

சென்னை: விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், ஆயுத பூஜை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதாக ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய்யின் லியோ ஸ்பாட்டில் தனுஷ்

இந்தாண்டு தமிழில் வெளியாகவுள்ள படங்களில் விஜய்யின் லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாஸ்டர் படத்திற்கு பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், லியோ மீதான எதிர்பார்ப்புக்கு அளவே இல்லை. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தனுஷும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே, நடிகர் விஷாலை லோகேஷ் கனகராஜ் சந்தித்தார். மார்க் ஆண்டனி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த சந்திப்பின் பின்னணியில், லியோ படத்தில் விஷால் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், அவர் லியோவில் நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தில், ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். படத்தின் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யா, தியேட்டரில் இருந்த ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அலறவிட்டார். லியோ படத்திலும் அதேபோன்ற ஒரு கேரக்டர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில்தான் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 LEO: Dhanush is playing a cameo role in Vijays Leo

லியோ படத்தை லோகேஷ் தனது LCU கான்செப்ட்டில் இயக்கி வருவதாக தெரிகிறது. இதனால், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்தவர்களும் இதில் இணைந்துள்ளனர். அதேபோல், லியோவில் இருந்து அடுத்த சீக்வெல் எடுப்பதற்காக தனுஷை உள்ளே கொண்டு வருகிறாராம் தனுஷ். லியோ படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என சொல்லப்பட்டாலும், இதை டாப் சீக்ரெட்டாக வைத்துள்ளாராம் லோகேஷ்.

அதேநேரம், காஷ்மீரில் லியோ ஷெட்யூலை முடித்துவிட்ட லோகேஷ், சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அதற்காக செட் போடப்பட்டுள்ள நிலையில், அங்கே தனுஷும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லியோ படத்திற்காக தனுஷ் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுவரை இதுகுறித்து லியோ தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

 LEO: Dhanush is playing a cameo role in Vijays Leo

அதேபோல், விஜய், தனுஷ், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இந்த தகவலை டாப் சீக்ரெட்டாக வைக்க முடிவு செய்துள்ளார்களாம். விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான், அந்தப் படத்தில் சூர்யாவும் நடித்துள்ளதாக கமல் அறிவித்தார். அதேமாதிரி தான் லியோவில் தனுஷ் நடிப்பதையும் ரகசியமாக வைக்க லியோ படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். ஆனால், இது உறுதியான அப்டேட் தான் என, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X