ஜவானை விட வசூல் வரணும் கோவிந்தா.. திருப்பதி மலை ஏறிய லியோ படக்குழு.. வீடியோவை பார்த்தீங்களா!

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் ஆகி ஜெயிலர், ஜவான் வசூலையே முந்த வேண்டும் என்கிற வேண்டுதலுடன் படக்குழுவினர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

ஜவான் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதிக்கு சென்ற வீடியோ காட்சிகள் தீயாக பரவின. அந்த படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இன்னமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

Leo Director Lokesh Kanagaraj and his team visits Tirupati for movie grand success

இந்நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இணை தயாரிப்பாளர் ஜகதீஷ் மற்றும் உதவி கதையாசிரியர் ரத்னகுமார் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

கோவிந்தா கோஷம்: கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே செல்லும் காட்சிகளை ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய கும்பலுடன் திருப்பதி மலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரத்னகுமார் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவிந்தா கோஷத்துடன் படக்குழுவினர் நடை பயணம் மேற்கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி: திருப்பதிக்கு செல்ல முடிவெடுத்த நிலையிலேயே நேற்று லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருப்பது லியோ படக்குழுவினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளபதி விஜய்யின் லியோ படத்துக்கு தினமும் 5 காட்சிகளுக்கு அனுமதி என தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

3வது சிங்கிள் சூப்பர்: நா ரெடி தான் பாடல் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி அந்த பாடலின் வரிகளையே மாற்ற பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாடல் வரிகளையும் மாற்றினர். Badass பாடலும் வெறித்தனமாக வெளியான நிலையில், குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் கவரும் விதத்தில் தற்போது லியோ படத்தின் 3வது சிங்கிளான அன்பெனும் ஆயுதம் வெளியாகி அனைவரையும் காஷ்மீருக்கு ஓசி டூர் கொண்டு சென்றுள்ளது.

Leo Director Lokesh Kanagaraj and his team visits Tirupati for movie grand success

ஜவான் வசூலை முந்துமா?: கமல்ஹாசன் படம் அதுவரை செய்யாத சாதனையை லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் செய்து மாஸ் காட்டியது. இந்நிலையில், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டி அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் வசூலையும் முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஜவான் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதிஷ் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X