Lokesh Kanagaraj: பாக்ஸர் லுக்கில் லோகேஷ் கனகராஜ்.. 10 படத்துக்கு பிறகு நடிக்கப் போறாரோ?
சென்னை: உலகம் முழுவதும் லியோ ஃபீவரையும் எல்சியூ ஃபீவரையும் பற்ற வைத்து விட்டு எதுவுமே பண்ணாத மாதிரி ரொம்பவே சிம்பிளா எந்தவொரு கெத்தும் காட்டாமல் தனது படத்திற்காக தனியாளாக 92க்கும் மேற்பட்ட பேட்டிகளை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் பாக்ஸிங் கற்று வருவதாக கூறிய நிலையில், பாக்ஸர் லுக்கில் அவர் இருப்பது போன்ற ஏஐ போட்டோக்களை ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்கநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தில் ஆரம்பித்த வேகம், மாஸ்டர், விக்ரம் தற்போது லியோ என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கிங்மேக்கர் லோகேஷ்: தொடர்ந்து கடுமையாக வேலை செய்து குடும்பத்தை கூட கவனிக்காமல் கமிட்மெண்ட்களுக்கு சரியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார். லியோ படத்தை கடைசி வரை தனி ஒரு மனிதனாக நின்று எப்படியாவது அனைத்து ரசிகர்களும் தனது உழைப்பை பார்த்து விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல பெட்டிகள் அளித்துள்ளார்.
10 படங்களுக்கு மேல் இயக்கப் போவதில்லை என்கிற ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்த நிலையில், இயக்குநரை தாண்டி பாக்ஸர் ஆக வேண்டும் என்கிற தனது இளம்வயது கனவை தற்போது நனவாக்க முயற்சித்து வருவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பாக்ஸர் லுக்: லியோ சூட்டிங் சமயத்திலே சுமார் ஆறு மாத காலம் பாக்சிங் பயிற்சி எடுத்து வந்ததாகவும், வரும் ஜனவரி 2024 ஆம் ஆண்டு ரிங்கில் சண்டை போடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஏஐ மூலமாக பாக்ஸர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய போட்டோக்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நாளை வெளியாக உள்ள லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸாக இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











