Lokesh Kanagaraj: மாநகரம் படத்தில இருந்தே இதைத்தான் ஃபாலோ செஞ்சிக்கிட்டிருக்கேன். லோகேஷ் பளீச்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி மிகப்பெரிய மாஸை உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில் இந்தப் படத்தின் ரிலீசுக்காகத்தான் ரசிகர்கள் சர்வதேச அளவில் காத்திருக்கின்றனர்.

சர்வதேச அளவில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தங்களது பங்கிற்கு லோகேஷ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் ப்ரமோஷன்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகரம் முதல் லியோ வரை தொடரும் கான்செப்டை பேசிய லோகேஷ்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் குறித்துதான் சர்வதேச அளவில் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். தொடர்ந்து லியோ குறித்த பல்வேறு ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன. சர்வதேச அளவில் அதிகமான டிக்கெட் புக்கிங்குள் செய்யப்பட்டு வருகின்றன. சில இடங்களில் டிக்கெட் புக்கிங்குகள் தாமதப்பட்டு வருவதாகவும் நாளை இந்த நிலை மாறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்கள் படம் குறித்த அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் விமர்சனத்தை அனிருத் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களின் படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. மாஸ்டர் ஸ்டைலில் லோகேஷுடன் இணைந்து அனிருத் வெளியிட்டுள்ள புகைப்படமும் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில் லியோ குறித்து பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார் லோகேஷ். அவரது அடுத்தடுத்த பேட்டிகளில் தன்னுடைய முதல் படமான மாநகரம் முதல் அடுத்ததாக ரஜினியுடன் இணையும் தலைவர் 171 படம் வரை பல சுவாரஸ்யங்களை பற்றி தெரிவித்து வருகிறார். மேலும் தான் 10 படங்களுடன் திரையுலகிலிருந்து விலக உள்ளதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே தலைவர் 171 படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்தும் பேசியுள்ளார்.
லோகேஷ் என்றாலே மல்ட்டி ஸ்டாரர் இயக்குநர் என்ற விஷயத்தை அவர் கிரியேட் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டில் அவரது இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில், கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் படத்தில் சிறப்பான கேரக்டர் அமைந்திருந்தது. இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், தான் மாநகரம் படத்திலிருந்தே மல்ட்டி ஸ்டாரர் படங்களைத்தான் இயக்கி வருவதாகவும் இது தற்போது லியோ படத்திலும் தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் லியோ படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்திலும் சாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











