எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை.. அதிக பணம் கொடுத்து படம் பார்க வேண்டாம்.. லோகேஷ் கனகராஜ் பேட்டி!

சென்னை:லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

லியோ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் நாளை வெளியாக உள்ளது.

Leo Director Lokesh kanagaraj press meet at Chennai

இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் 5மணி காட்சிக்கு அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில் மட்டும் நாளை 9 மணிக்கு வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் பேட்டி: இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்சனை வரும், யாரோ ஒருத்தருக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டிருக்கும். உதாரணமாக டிரைலரில் வந்த கெட்டவார்த்தை அவ்வுளவு பெரிய பிரச்னையாக மாறியது. அந்த வார்த்தை விஜய் பேச மாட்டேன் என்றார். நான் தான் சமாதானம் செய்து பேசவைத்தேன்.

டிரைலர் சர்ச்சை: கெட்டவார்த்தைக்கு விமர்சனங்கள் வந்த உடனே அதை எடுத்துவிட்டோம். படத்தில் கெட்ட வார்த்தை வராது. கெட்டவார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் காண்பித்து என்ன சந்தோஷத்தை அனுபவிக்கப்போகிறோம் என்பதல்ல, அந்த வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல அந்த கதாப்பாத்திரம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

காரணத்தை சொல்லிவிட்டேன்: மேலும், இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆடியோ லாஞ்ச் நடைபெறாததற்கு காரணத்தை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ப்ரீ பாஸ் என்றால் எப்படி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். நாளை ஏதாவது பிரச்னை என்றால் அது படத்திற்கு எதிர்மறையாகிவிடும். அதனால்தான் ஆடியோ லாஞ்ச் இல்லாமல் போக காரணம். இன்றைக்கு தேதிக்கு இந்த படத்திற்கான விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன் என்றார்.

அதிக பணம் கொடுத்து: தொடர்ந்து பேசிய லோகேஷ், படத்தில் போதை பொருள் குறித்து வருவதே அதை நிறுத்துவதற்குதானே தவிர அதை ஊக்கப்படுத்த நல்ல என்றார். மேலும், படத்திற்கு எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை, அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X