Arjun birthday: அர்ஜூனின் அசாதாரண முயற்சி.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து அதிரடி சரவெடியாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் -விஜய் கூட்டணியில் இரண்டாவது படமாக லியோ உள்ளது.

விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என அதிகமான நட்சத்திரங்களை இந்தப்படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் லோகேஷ்.

லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், போஸ்டர்கள் வெளியான நிலையில் அடுத்தடுத்து சஞ்சய் தத், அர்ஜூன் என கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Leo Director Lokesh Kanagaraj shares about Arjuns dedication

லியோ படத்தில் அர்ஜூன் கேரக்டரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது மிரட்டலாக உருவாகியுள்ளது லியோ. முந்தைய படம் பேமிலி சென்டிமெண்டாக விஜய்யின் இயல்பான நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது லியோ படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் அவருடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா ஜோடியாகியுள்ளார். படத்தில் கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

லியோ படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது. காஷ்மீரில் துவங்கப்பட்ட படத்தின் சூட்டிங் தொடர்ந்து 52 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கின் காட்சிகள் உள்ளிட்டவை வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவையும் வெளியாகி மாஸ் காட்டின.

Leo Director Lokesh Kanagaraj shares about Arjuns dedication

இந்நிலையில் படத்தின் முக்கியமான வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் அவரது கேரக்டர் லுக் மற்றும் கேரக்டர் பெயர் வெளியானது. அவரது கேரக்டர் ஆண்டனி தாஸ் என்பது வெளிப்படுத்தப்பட்டது. மிரட்டலான அந்த வீடியோவில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பான காட்சிகள் அமைந்திருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி படத்தில் அடுத்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூனின் கேரக்டர் பெயர் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் அவர் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் படத்தில் சஞ்சய் தத்தின் தம்பி என்பது முன்னதாகவே வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் முன்னதாக வெளியான லோகேஷின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டரை பிரதிபலிக்கும் வகையில் தற்போது ஹரோல்ட் தாஸ் கேரக்டர் அமைந்துள்ளது.

ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா செய்வது போல, ஹரோல்ட் தாசும் கேங்ஸ்டராக சம்பவம் செய்கிறார். அதே வெறித்தனம் அர்ஜூன் முகத்திலும் காணப்படுகிறது. ஆனாலும் சூர்யாவை பீட் செய்ய முடியாது என்றே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும், விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டிற்கு முக்கியமான காரணமாக சூர்யா அமைந்தது போல, இந்தப் படத்திலும் ஹரோல்ட் தாஸ் அமைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் அசாதாரணமான முயற்சிகளை அர்ஜூன் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் அர்ஜூனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜூனுக்கு வாழ்த்துக்களையும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ஹரோல்ட் தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X