Leo Disaster: காத்து வாங்கும் லியோ புக்கிங்... ஆறே நாளில் வாஷ் அவுட்... விஜய்க்கு தொடரும் சோதனை!!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் இருந்தது.

 Leo Disaster: Leo completely washout in Chennai itself on day 7

ஆனால், அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்கள் லியோவுக்கு சோதனையாக அமைந்தது.

இந்நிலையில், தொடர் விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து, லியோ டிக்கெட் புக்கிங் காத்து வாங்கி வருகிறது.

காத்து வாங்கும் லியோ புக்கிங்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த வாரம் 19ம் தேதி ரிலீஸானது. விஜய்யுடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கெளதம் மேனன் என பலர் நடித்திருந்தனர்.

 Leo Disaster: Leo completely washout in Chennai itself on day 7

முக்கியமாக விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான முதல் LCU படமாகவும் லியோ அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கைதி, விக்ரம் படங்கள் வரிசையில் லியோவும் லோகேஷின் LCUன் கீழ் இணைந்தது. இதனால் லியோ படத்திற்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. அட்வான்ஸ் புக்கிங் மூலமே பல கோடி ரூபாய் வரை வசூலித்தது. மேலும், முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்தது.

இதனால், கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் செய்த படமாக லியோ சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளில் இருந்தே லியோவுக்கு வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறையை கணக்கில் வைத்தே லியோ படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்தது படக்குழு. அதன்படி இந்த ஆறு நாட்கள் மட்டுமே லியோவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

7வது நாளான இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் லியோ பட டிக்கெட்டுகள் புக் ஆகவில்லை. சென்னை மட்டும் இல்லாமல் கேரளாவில் கொச்சின், திருவனந்தபுரம், கர்நாடகாவில் பெங்களூர் போன்ற நகரங்களிலும் லியோ டிக்கெட் புக்கிங் காத்து வாங்கி வருகிறது. இதனால் டிவிட்டரில் லியோ டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 Leo Disaster: Leo completely washout in Chennai itself on day 7

லியோ ரிலீஸுக்கு முன்பு இந்தப் படத்தின் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்த ரசிகர்கள், இப்போது ஃப்ரீயாக இருந்தும் லியோ பார்க்க அதிக ஆர்வம் காட்டவில்லை. லோகேஷின் திரைக்கதை மேஜிக் லியோவில் எடுபடவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் தான் 6 நாட்கள் விடுமுறை முடிந்ததும் லியோவுக்கான வேகமும் குறந்துவிட்டது என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். பீஸ்ட், வாரிசு படங்களைத் தொடர்ந்து லியோவும் விஜய்க்கு சோதனையாக அமைந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X