Leo Disaster: "லியோவில் பாதி தான் லோகேஷ் இயக்கினார்... எல்லாமே விஜய்யோட பிளான்” பிரபலம் சொன்ன உண்மை

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ள லியோ, விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கெல்லாம் காரணம் லியோ படத்தில் பாதி போர்ஷனை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என சொல்லப்படுகிறது.

 Leo Disaster: Lokesh has directed only half the portion of Vijays Leo

விஜய் - லோகேஷ் இடையே மோதல் உண்மை தான்: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோவில் இணைந்தது. மேலும், இந்த காம்போவின் முதல் LCU படமாகவும் லியோ உருவானது. இதனால் முதல் நாளில் இருந்தே லியோவுக்கு தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் லியோவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதேநேரம் லியோ எதிர்பார்த்த அளவில் இல்லையென்றும், கொடுத்த பில்டப்புக்கு பாதி கூட படத்தில் வரவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. கைதி, விக்ரம் படங்களின் திரைக்கதையில் இருந்த லோகேஷி மேஜிக் லியோவில் சுத்தமாக எடுபடவில்லை எனவும் சொல்லப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் லியோ படத்தில் பாதியை தான் லோகேஷ் இயக்கியுள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லியோ படப்பிடிப்பில் விஜய் - லோகேஷ் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் இந்தப் படத்தின் பாதியிலேயே லோகேஷ் விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கூறியிருந்தார். இதுவும் பொய் தான் என இப்போது சொல்லப்படுகிறது. அதாவது லியோ படத்தின் கதை, திரைக்கதையில் விஜய் சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருந்தாராம்.

ஆனால், லோகேஷ் அதனை மாற்றவில்லை என்பதால், அவரது நண்பரும் அசோஷியேட் டைரக்டருமான ரத்னகுமாரை வைத்து லியோவில் பல மாற்றங்களை செய்துள்ளார் விஜய். இதனால் ஒருகட்டத்துக்கு மேல் லோகேஷ் லியோவில் இருந்து விலகிவிட்டதாகவும், மீதமிருந்த காட்சிகளை ரத்னகுமார் தான் இயக்கியதாகவும் பிரபல சினிமா செய்தியாளர் கூறியுள்ளார்.

மேலும், லியோ லோகேஷின் படம் என்றால் மட்டுமே பிஸினஸ் நடக்கும் என்பதால், அவரது பெயரை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை லியோ ஆடியோ லான்ச் நடந்திருந்தால், லோகேஷ் கனகராஜ் மேடை ஏறி பேசியிருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் இசை வெளியீட்டு விழாவை அவசரமாக ரத்து செய்தனர் என அவர் கூறியுள்ளார்.

 Leo Disaster: Lokesh has directed only half the portion of Vijays Leo

அதேநேரம் லியோ எதிர்பார்த்த அளவில் இல்லையென்றும், கொடுத்த பில்டப்புக்கு பாதி கூட படத்தில் வரவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. கைதி, விக்ரம் படங்களின் திரைக்கதையில் இருந்த லோகேஷின் மேஜிக் லியோவில் சுத்தமாக எடுபடவில்லை எனவும் சொல்லப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் லியோ படத்தில் பாதியை தான் லோகேஷ் இயக்கியுள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X