Leo Disaster Meet: ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்..? விஜய் ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்த ரஜினி ஃபேன்ஸ்!
சென்னை: விஜய் நடித்த திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது.
இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் லியோ வெற்றி விழாவுக்கு எதிராக Leo Disaster Meet என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ட்ரெண்டாகும் Leo Disaster Meet: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்த இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்த இந்தப் படத்துக்கு, அதன்பின்னர் கலவையான விமர்சனங்களே வந்தன. இதனால், அடுத்தடுத்த நாட்களில் லியோ தடுமாறத் தொடங்கியது.
லோகேஷின் LCU-ன் கீழ் உருவான போதும், லியோ ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். இந்நிலையில் லியோ வெற்றி விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ சக்சஸ் மீட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்பட்ட லியோ, 500 கோடி கலெக்ஷனுக்கே தடுமாறியதாக நெட்டிசன்களும் ரஜினி ரசிகர்களும் ட்ரோல் செய்து வந்தனர். முக்கியமாக ரஜினியின் ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கும் என விஜய் ரசிகர்கள் சவால் விட்டு வந்தனர்.

ஆனால், எதிர்பார்த்தளவில் லியோ படத்தின் வசூல் இல்லை என தியேட்டர் உரிமையாளர்களே கூறி வந்தனர். இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, ஓடாத படத்துக்கு என்ன வெற்றி விழா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது Leo Disaster Meet என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பீஸ்ட், வாரிசு, லியோ என தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி கொடுத்த விஜய், சக்சஸ் மீட் கொண்டாடுகிறாரா என கமெண்ட்ஸ் செய்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











