Leo Disaster: "லியோ படத்தால் லாபம் இல்லை... இது நியாயமே கிடையாது!!” விளாசிய திருப்பூர் சுப்பிரமணியம்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த வாரம் ரிலீஸானது.
7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியான லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
ஆனால், இந்தப் படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லையென திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

லியோ படத்தால் லாபம் இல்லை
விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் லியோ. லோகேஷின் LCU ஜானரில் வெளியான லியோவில், விஜய்யுடன் த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வழக்கம் போல லியோவை ஆக்ஷன் ஜானரில் தரமாக இயக்கியுள்ளார் லோகேஷ்.
முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பொது இடங்களில் லியோ ட்ரெய்லர் ஸ்க்ரீன் செய்யவும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் அதிகாலை 4 மணி லியோ FDFS காட்சிக்கும் தமிழ்நாடு அரசு பெர்மிஷன் கொடுக்கவில்லை. இதனிடையே லியோ தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே பஞ்சாயத்து ஏற்பட்டது.
லியோ படத்தின் தியேட்டர் வசூலில் அதிக ஷேர் கொடுக்க வேண்டும் என தயாரிப்புத் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், லியோ ரிலீஸுக்கு ஒருநாள் முன்பு வரை இந்த பஞ்சாயத்து நீடித்தது. இதனால் சென்னை ரோகிணி தியேட்டர் முதல் பல திரையரங்குகளில் லியோ டிக்கெட் புக்கிங் தாமதமாகவே தொடங்கியது.
இத்தனை பிரச்சினைகளையும் கடந்து ரிலீஸான லியோவுக்கு முதல் நாளில் மட்டுமே நல்ல ஓபனிங் கிடைத்தது. லியோ படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் கலெக்ஷன் குறையத் தொடங்கியது. இதனால் முதல் நாளில் லியோ வசூல் 148 கோடி என கெத்தாக அறிவித்த படக்குழு, அதன்பின்னர் கலெக்ஷன் பற்றி அபிஸியலாக எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். "லியோ லாபகரமான படமாக அமையவில்லை எனவும், இந்தப் படத்திற்காக தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு 80% ஷேர் வாங்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிகமான ஷேர் கேட்டு திரையரங்க உரிமையாளர்களை தயாரிப்புத் தரப்பினர் கசக்கிவிட்டார்கள்."

"அதனால் படம் வசூல் அதிகமாக செய்தாலும் அதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீதத் தொகை திரையரங்க பராமரிப்புக்கே போதுமானதாக இருக்காது. ஆனால், லியோவுக்கு கேரளா போன்ற வெளிமாநிலங்களில் 60% ஷேர் மட்டுமே வாங்கியுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்?"
"லியோவுடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்த தியேட்டர்களில் பாதி கூட கிடைத்திருக்காது. தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்தை விருப்பப்பட்டு திரையிடவில்லை. வேறு படம் இல்லாததால் தான் லியோவை திரையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக" திருப்பூர் சுப்ரமணியம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











