Leo Disaster: லியோ டிக்கெட் கேன்சல்... ரசிகர்கள் அதிரடி... பச்சை நிறமாக மாறிய Book My Show!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
ஆயுத புஜை விடுமுறையை முன்னிட்டு சோலோவாக களமிறங்கிய லியோ, முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதனால், வரும் நாட்களிலும் லியோ படத்தின் கலெக்ஷன் செம்ம மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், லியோ படத்திற்காக ஆன்லைனில் ரிசர்வேஷன் செய்திருந்த ரசிகர்கள், தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றனர்.

லியோ டிக்கெட்களை கேன்சல் செய்யும் ரசிகர்கள்
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த லியோ, இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய போதே, ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப படப்பிடிப்பை வேகமாக முடித்தார் லோகேஷ்.
மேலும், போஸ்ட் புரொடக்ஷன், எடிட்டிங் என அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சொன்னபடி அக்டோபர் 19ல் லியோ படத்தை ரிலீஸ் செய்தார் லோகேஷ். விஜய்யுடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
அதுமட்டும் இல்லாமல் லியோவும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் இந்தப் படம் வெளியாகும் முன்பே டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்தது. அதன்படி லியோ வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் மிகப் பெரிய ஓபனிங் இருந்தது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லையென்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
லியோ LCU-ன் கீழ் உருவானதால் முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. அதேநேரம் லோகேஷின் வழக்கமான மேஜிக் லியோவில் இல்லை என நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. கைதி, விக்ரம் படங்கள் போல லியோவும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ச்சியாக லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லியோ ரிலீஸுக்கு முன்பு இந்தப் படத்தின் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்த ரசிகர்களெல்லாம், இப்போது கேன்சல் செய்யத் தொடங்கிவிட்டனராம். முதல் நாளில் லியோ டிக்கெட் ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மோசமான ரிசல்ட் காரணமாக லியோ ஃபீவர் மொத்தமாக குறைந்துவிட்டது. ஆயுத பூஜை விடுமுறை இன்னும் 3 நாட்கள் வரை இருக்கும் நிலையில், ஆன்லைனில் லியோ டிக்கெட் புக்கிங் வேகம் எடுக்கவில்லை.

படம் வெளியாகும் முன்பு அடித்துப்பிடித்து டிக்கெட் புக் செய்தவர்கள் கூட இப்போது கேன்சல் செய்யத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் புக்மைஷோவில் சிவப்பு நிறத்தில் இருந்த லியோ டிக்கெட் புக்கிங், தற்போது பச்சை நிறத்தில் இருக்கிறது. தரமான ஓபனிங் இருந்தும் லியோ முதல் வாரத்திலேயே தடுமாறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் லியோ ஆயிரம் கோடி வசூலிப்பது கஷ்டம் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











