Leo: “நாலா தேசத்திலும் விசாரிக்கிறேன்... நல்ல செய்தி இல்லை.." பிரபலங்கள் சொல்றது என்ன?

சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ.

அதிக எதிர்பார்ப்புடன் உருவான லியோ, இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து லியோவும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ளது.

இதனால் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், வலைப்பேச்சு அந்தணன், செய்யாறு பாலு ஆகியோர் லியோவுக்கு நெகட்டிவ் விமர்சனம் கூறியுள்ளனர்.

 Leo Disaster: Vijays Leo is the biggest disaster movie

விஜய்யின் லியோ சோலி முடிஞ்சு: விஜய் நடிப்பில் இதுவரை வேறு எந்த படங்களுக்கும் இல்லாத எதிர்பார்ப்பு லியோவுக்கு இருந்தது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யும் லோகேஷும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் லியோவுக்கு அதிக ஹைப் இருந்தது. அதேபோல், கைதி, விக்ரம் படங்கள் வரிசையில் லியோவும் LCU-ன் கீழ் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் இன்று வெளியான லியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தவிர கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரையிடப்பட்டது. இதனால், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் விஜய்யின் லியோ தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. லியோ FDFS பார்த்த விஜய் ரசிகர்கள் படம் சூப்பர் என்றே கூறி வந்தனர்.

ஆனால், சினிமா விமர்சகர்களுக்கு கிடைத்த தகல்களின் படி, லியோ ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இதனால் 'லியோ இண்டஸ்ட்ரி ஹிட்' என ட்ரெண்டாகி வந்த சில நிமிடங்களிலேயே, 'லியோ டிசாஸ்டர்' என்ற ஹேஷ் டேக்கும் வைரலானது. இதுபற்றி ட்வீட் போட்டுள்ள வலைப்பேச்சு அந்தணன், "நாலா தேசத்திலும் விசாரிக்கிறேன்... நல்ல செய்தி இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Leo Disaster: Vijays Leo is the biggest disaster movie

அதேபோல், பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலுவும் விஜய்யின் லியோ பற்றி நெகட்டிவாகவே கமெண்ட்ஸ் செய்துள்ளார். "ஒரு ரசிகர் என்னை பார்த்த பார்வை இதுக்கா சாமீ பொங்களூரு வந்தேன்னு கேட்டா மாதிரி இருந்துச்சு" என ட்வீட் போட்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் இருந்து அதிகாலை 4 மணி FDFS பார்க்கச் சென்ற விஜய் ரசிகர், லியோ பார்த்துவிட்டு புலம்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், லியோ சோலி முடிஞ்சு என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம், விஜய் ரசிகர்களோ இதுபோன்ற நெகட்டிவான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரசிகர்கள் சிலர் லியோ முதல் பாதி மட்டும் தான் சூப்பர் என்றும், இரண்டாம் பாதி ஒர்த் இல்லை எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X