Leo Disaster: “விஜய்ண்ணாவுக்கு மிருக தோஷம்... லியோ டைட்டிலே Disaster தான்..” ட்ரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழ்நாடு தவிர மற்ற பகுதிகளில் அதிகாலை 4 மணி ஸ்பெஷல் ஷோவில் லியோ திரையிடப்பட்டது.

முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ள லியோ நெகட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் லியோ டைட்டிலை வைத்து விஜய்க்கு மிருக தோஷம் இருப்பதாக மீம்ஸ் ஒன்று செம்ம வைரலாகி வருகிறது.
விஜய்ண்ணாவுக்கு மிருக தோஷம்
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் இன்று ஆரவாரமாக ரிலீஸானது. லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது முதலே அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன. நான் ரெடி பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி, லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது, ஆடியோ லான்ச் கேன்சல், லியோ FDFS காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு, தியேட்டர் உரிமையாளர்களுடன் பஞ்சாயத்து என கலந்துகட்டி அடித்தது.
எல்லா பிரச்சினைகளையும் பஞ்சாயத்துகளையும் கடந்து லியோ திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாடு தவிர மற்ற பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே லியோ FDFS ஷோ திரையிடப்பட்டது. முதல் ஷோ முழுவதும் விஜய் ரசிகர்கள் நிரம்பியிருந்ததால், லியோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், அடுத்தடுத்து வெளியான விமர்சனங்கள் லியோவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

முதல் பாதியில் தரமான சம்பவமாக அமைந்த லியோ, இரண்டாம் பாதியில் இம்சையாகிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இரண்டாம் பாதி விஜய் படமா அல்லது லோகேஷ் சம்பவமா என்பதே தெரியவில்லை. ஓவர் பில்டப் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் புலம்பி தீர்த்துவிட்டனர். ஆனால், ஒரே ஆறுதல் லியோ LCU படமாக வெளியானது மட்டுமே எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் லியோ Disaster என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் வைரலான ஒரு மீம், விஜய் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. அதாவது விலங்குகள், பறவைகளின் பெயரில் விஜய் படங்களுக்கு டைட்டில் வைத்தால், அது சோலி முடிந்துவிடும் என்பதாக மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர். அதாவது, "விஜய்ண்ணா கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்... உங்களுக்கு மிருக தோஷம் இருக்கு... பறவைகள், விலங்குகள் பேர்ல டைட்டில் வைக்காதீங்க" என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் பறவைகள், விலங்குகள் பெயரில் விஜய் நடித்து வெளியான படங்களின் போஸ்டரையும் அதில் இணைத்துள்ளனர். அதன்படி சுறா, குருவி, புலி, பைரவா, பீஸ்ட் ஆகிய படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக மரண அடி வாங்கின. அந்த வரிசையில் தற்போது லியோவும் இணைந்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள், அப்போ லியோவும் சோலி முடிஞ்சுதா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











