Leo Fans Review: “லியோ விக்ரம் படத்துக்கும் மேல... அடிபொலி சினிமா..” கேரள ரசிகர்கள் வெறித்தனம்!!
திருவனந்தபுரம்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU மூவியாக உருவாகியுள்ள லியோ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கும் மேல் என ரசிகர்கள் வெறித்தனமாக விமர்சனம் செய்துள்ளனர்.

லியோ விக்ரம் படத்துக்கும் மேல: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், சொன்னபடி இன்று வெளியானது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ ரிலீஸானது. இதனால் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் கேரள ரசிகர்கள் லியோ படத்தை வெறித்தனமாக கொண்டாடியுள்ளனர்.
தமிழ்நாட்டிற்குப் பிறகு விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா தான். விஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் மாஸ் செய்யும் கேரளா ரசிகர்கள், லியோவை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், லியோ படத்துக்கு கேரள ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனம் வைரலாகி வருகிறது. "விஜய்ண்ணா தான் மாஸ்... வேற லெவல்... லியோ சூப்பர் சினிமா" என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல், லியோ அடிபொலி சினிமா எனக் கூறும் ரசிகர்கள், ஃபர்ஸ்ட் ஹால்ஃப் செம்ம மாஸ்ஸாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதல் பாதியே LCU தான், லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். கைதியில் இருந்து லியோ தொடங்குவதாகவும், ஒவ்வொரு சீனிலும் விஜய் சும்மா தெறிக்கவிட்டுள்ளார் என்றும் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக விஜய்யின் லியோ எதிர்பார்த்ததை விட செம்ம மாஸ்ஸான சினிமாவாக வெளியாகிவியுள்ளது. விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்தால் இப்படித்தான் தெறிக்க வேண்டும் எனவும் கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் லியோவுக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும் போது, அங்கு மட்டுமே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கன்ஃபார்ம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











