Leo: “பயமும் இல்ல, பதுங்கவும் இல்ல..” லியோ ஆடியோ லான்ச் கேன்சல்... விஜய் கொடுத்த த்ரோபேக் பஞ்ச்!

சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் உட்பட விஜய் மக்கள் இயக்கத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதனையடுத்து விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் டிவிட்டர் பதிவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leo: Fans trended Vijays Twitter post on Leo Audio launch cancellation issue

பயமும் இல்ல, பதுங்கவும் இல்ல விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன்ஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறவிருந்தது. இதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதேபோல், லியோ ஆடியோ லான்ச், விஜய்யின் அரசியல் மாநாடு போல நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால், ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாகவே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனிடையே விஜய்யின் ட்விட்டர் பதிவு ஒன்றும், டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #WeStandWithLEO என்கிற ஹேஷ் டேக்கை டிரெண்டாக்கி வரும் ரசிகர்கள், அதில் விஜய்யின் டிவிட்டர் பதிவையும் ஷேர் செய்துள்ளனர். 2014ம் ஆண்டு விஜய்யிடம் ரசிகர் ஒருவர், "தலைவா நம்ம பயந்து ஒதுங்குகிறோமா இல்ல, பாய பதுங்குகிறோமா.." என டிவிட்டரில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய், "பயமும் இல்லை, பதுங்கவும் இல்லை, அனுபவம் தேடுறோம் அவ்வளவுதான்" என கூலாக ரிப்ளை செய்திருந்தார்.

Leo: Fans trended Vijays Twitter post on Leo Audio launch cancellation issue

கத்தி படத்தின் ரிலீஸுக்கு வந்த சிக்கலின் போது, விஜய் தனது டிவிட்டரில் இப்படி கருத்துத் தெரிவித்தார். அப்போது வைரலான இந்த பதிவை, தற்போது லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதற்கு பதிலடியாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இதனால், சமூக வலைத்தளங்களில் லியோ ஆடியோ லான்ச் என்ற ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது. அதில், பெரும்பாலானோர் விஜய்க்கும் லியோ திரைப்படத்துக்கு ஆதாரவாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X