Leo FDFS: “விஜய்ண்ணா சம்பவம் பண்றோம்..” லியோ FDFS புக்கிங்... நள்ளிரவில் குவிந்த கேரள ரசிகர்கள்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனையடுத்து இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை திரையரங்குகள் ஓபன் செய்துவிட்டன.

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு FDFS காட்சி கன்ஃபார்ம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் லியோ FDFS டிக்கெட் புக்கிங் செய்ய, அதிகாலையிலேயே விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவில் விஜய்ண்ணா சம்பவம் உறுதி
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரிலீஸாக இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் லியோ வைப்பில் உள்ளனர். விஜய் - லோகேஷ் காம்போ இந்தமுறையும் தரமான சம்பவம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், லியோ டிக்கெட் புக்கிங் இருதினங்களுக்கு முன்னரே தொடங்கியது.
கோவை, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களைத் தொடர்ந்து சென்னையிலும் லியோ புக்கிங் இன்று தொடங்குகிறது. அதேபோல், தமிழ்நாடு தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் சில ஏரியாக்களிலும் லியோ அட்வான்ஸ் புக்கிங் ஓபனாகியுள்ளது. பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில், அதிகாலை 4 மணி FDFS ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் ஓபனாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, லியோ FDFS காலை 9 மணிக்கு தான் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அதிகாலை 4 மணி FDFSக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனிடையே கேரளாவில் லியோ புக்கிங் தாறுமாறாக தொடங்கியது.
தமிழ்நாட்டுக்குப் பின்னர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் மாநிலம் கேரளா தான். இதுவரை கேரளாவில் வெளியான விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான சம்பவங்களை செய்துள்ளது. இதனால், லியோ படத்திற்கும் அங்குள்ள ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேநேரம் சில தினங்களுக்கு முன்னர் பாய்காட் லியோ என்ற ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்துவந்தனர் மோகன்லால் ரசிகர்கள்.
மோகன்லாலுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததாகவும், அதனால் லியோவை கேரளாவில் புறக்கணிக்க உள்ளதாகவும் டிவிட் செய்து வந்தனர். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கியுள்ளது ஒரு வைரல் வீடியோ. கேரளாவின் திருச்சூரில் உள்ள திரையரங்கில், லியோ FDFS ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. அதனை வாங்குவதற்காக நள்ளிரவு முதலே தியேட்டரில் திரண்ட விஜய் ரசிகர்கள், லியோ டிக்கெட்டை புக் செய்துள்ளனர்.
இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வரும் நிலையில், லியோ கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களும் லியோ ஆயிரம் கோடி வசூலிக்கும் என சவால் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications