Leo FDFS: கேரளா, ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS... பாவம்யா தமிழ்நாட்டு ரசிகர்கள்!

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

 Leo FDFS: Leo FDFS at 4 am in Kerala and Andhra Pradesh

ஆனாலும், முதல் நாளில் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என அறிவித்துவிட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், கேரளா, ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS

விஜய்யின் லியோ படத்துக்கு இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில், 19ம் தேதி ரிலீஸாகும் லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் போட்டிப்போட்டு லியோ டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.

முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் தான் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதாக படக்குழு தெரிவித்தாலும், விஜய்க்கு மறைமுகமாக அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லியோ ஸ்பெஷல் ஷோவுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது.

அதாவது லியோ ரிலீஸாகும் 19ம் தேதி கூடுதலாக இரண்டு சிறப்புக் காட்சிகள் உட்பட மொத்தம் 6 ஷோவும், 20 முதல் 24ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஷோ என, தினசரி 5 காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. முதலில் வெளியான அறிவிப்பில் லியோ FDFS பற்றிய எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் இருந்தது. இதனால், லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பின் படி, லியோ FDFS காலை 9 மணிக்கு தான் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு சோகமான செய்தியும் கிடைத்துள்ளது. அதாவது கேரளா, ஆந்திராவில் லியோ FDFS எப்போது என தெரியவந்துள்ளது.

அதன்படி, கேரளாவில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடலாம் என அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலும் அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS என சொல்லப்படுகிறது. அமெரிக்கா உட்பட சில வெளிநாடுகளிலும் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாம். இதனால், தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X