Leo FDFS: "இது என்ன ஜெயிலரா..? தளபதியோட லியோ.." சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதிக் கேட்டு தமிழ்நாடு அரசிடம் படக்குழு கோரிக்கை வைத்திருந்தது.

இதனையடுத்து அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "இது என்ன ஜெயிலரா... தளபதியின் லியோ" என விஜய் ரசிகர்கள் ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.

 Leo FDFS: Vijay fans trolled Rajini for getting permission for Leo special show

சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய் ரசிகர்கள்: விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக ரிலீஸாகும் லியோவுக்கு, தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

அதாவது விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகின. அப்போது சென்னை ரோகிணி தியேட்டரில் அதிகாலை 4 மணி ஸ்பெஷல் ஷோ பார்க்க ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அந்த நேரம் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி FDFS, காலை 7 மணி ஸ்பெஷல் ஷோ ஆகியவைக்கு இனி அனுமதி கிடையாது என சொல்லப்பட்டது.

முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, அதிகாலை 4 மணி FDFS, ஸ்பெஷல் ஷோ எதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், காலை 9 மணிக்குதான் முதல் ஷோ திரையிடப்பட்டது. இதனால் விஜய்யின் லியோ படத்துக்கும் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின.

இந்த சிக்கலை தவிர்க்க, ஒருநாள் முன்னதாக 18 ம் தேதி மாலை லியோவை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வந்தது. அதேநேரம் 19 முதல் 24ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு லியோ ஸ்பெஷல் ஷோ திரையிட அனுமதி கேட்டு தயாரிப்புத் தரப்பினர் தமிழ்நாடு அரசை அணுகியிருந்தனர். அதனை ஏற்று நேரம் குறிப்பிடாமல் லியோ தினசரி 5 காட்சிகள் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

 Leo FDFS: Vijay fans trolled Rajini for getting permission for Leo special show

இதனையடுத்து லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸாகும் எனவும், அதன்பின்னர் தினசரி 5 காட்சிகள் மட்டும் திரையிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை வம்பிழுத்து வருகின்றனர். அதாவது ஜெயிலருக்கே கிடைக்காத FDFS ஷோ அனுமதி லியோவுக்கு கிடைத்துள்ளதாக மாஸ் காட்டி வருகின்றனர்.

மேலும், "இது என்ன ரஜினியோட ஜெயிலரா... தளபதியோ லியோ" என ரத்தம் தெறிக்க பஞ்ச் அடித்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே ஜாலியான கலாட்டா அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் வரும் 14ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X