Leo FDFS: லியோ FDFS சிக்கலுக்கு முடிவு... ரிலீஸ் தேதியில் மாற்றம்... ப்ரீமியர் ஷோ கன்ஃபார்ம்?

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை FDFS, காலை 9 மணி ஸ்பெஷல் ஷோ ஆகியவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால், ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, லியோ படக்குழு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறதாம்.

 Leo FDFS: Vijays film Leo premiere show will be screened on the 18th evening

அதன்படி, லியோ படத்தின் FDFS காட்சிக்குப் பதிலாக, ப்ரீமியர் ஷோவுக்கு பிளான் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோ ரிலீஸ் தேதியில் மாற்றம்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் காம்போ இணைந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனை எகிற வைக்கும் விதமாக லியோ ட்ரெய்லரும் வெளியாகி மாஸ் காட்டியது. லியோ ட்ரெய்லர் முழுவதும் ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ படத்தை FDFS எனப்படும் அதிகாலை 4 மணிக்கு பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனிடையே அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு அதிகாலை FDFS அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ரோகிணி திரையரங்கம் முன்பு ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதுபோல மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதனால், தமிழ்நாட்டில் இனிமேல் எந்த படங்களுக்கும் அதிகாலை FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்யின் லியோ மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி FDFS திரையிடலுக்கு ரெடியாகிவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இன்னொருபக்கம் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்திய நேரப்படி, 18ம் தேதி இரவே லியோ வெளியாகிவிடும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லியோ டீம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி, ஒருநாள் முன்னதாக லியோ படத்தை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ப்ரீமியர் ஷோ என்ற பெயரில் வரும் 18ம் தேதி மாலை, இரவு காட்சிகளில் லியோவை ஸ்கீரினிங் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X