Leo - பான் இந்தியா படத்துக்கு விஜய் ஒத்துக்கொள்ளவில்லை - லியோ தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: Leo (லியோ) லியோவை பான் இந்தியாவாக உருவாக்க விஜய் ஒத்துக்கொள்ளவில்லை என லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
வாரிசு படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தில் தொடங்கி மல்லுவுட் நடிகர் மாத்யூ தாமஸ் வரை ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் என பலர் நடிக்கின்றனர். இதனால் லியோவில் செம ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

எப்போது முடிகிறது ஷூட்டிங்?:
படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோ, பையனூர் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில் ஜூன் மாதம் 15ஆம் தேதி ஷூட்டிங் முடிவடையவிருக்கிறதாம். அதனையடுத்து விஜய் டப்பிங் கொடுப்பார் என்றும் அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.
என்ன கதை?:
சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி, பாட்ஷா படத்தில் ரஜினி எப்படி மிகப்பெரிய டானாக இருந்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்துவிட்டு அமைதியாக சென்னையில் வாழ்வாரோ; அதேபோல் மிகப்பெரிய கேங்ஸ்டரான விஜய் தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் வாழ்வார். அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை என கூறப்பட்டது.

பான் இந்தியா படத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை:
இச்சூழலில் லியோ படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதுதான் விஜய்யின் படங்களில் முதல் பான் இந்தியா படமாகும். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் படம் குறித்து கூறுகையில், "லியோ படத்தை பான் இந்தியா படமாக எடுக்க விஜய் விரும்பவில்லை. நாங்கள் எல்லாம் சொல்லித்தான் அவரை சம்மதிக்க வைத்தோம். சஞ்சய் தத் நடிப்பதால் இதை பான் இந்தியா படமாக்கவில்லை. நடிகரால் ந்மட்டு ஒரு படம் பான் இந்தியா படமாக ஆகாது. ஸ்க்ரிப்ட்டால்தான் ஆகும்.

சஞ்சய் தத்துக்கு என்ன ரோல்?:
லியோ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் மிகவும் ஸ்டிராங்கானது. அதனால் தான் அவரை லியோவில் நடிக்க வைக்க முடிவு செய்தோம்" என கூறினார். இதற்கிடையே லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்கவிருப்பதே சஞ்சய் தத்தான். அவரும் படத்தில் கேங்ஸ்டராகத்தான் நடித்திருக்கிறார் என தகவல் கடந்த வாரம் வெளியானது.
அர்ஜுனுக்கு என்ன கேரக்டர்?:
அதேபோல் அர்ஜுன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவர் விஜய்க்கு முதலில் நண்பராக இருந்துவிட்டு துரோகியாக மாறுவது போன்றுதான் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என முதலில் கூறப்பட்ட சூழலில் அதெல்லாம் இல்லை விஜய்க்கு சகோதரராக அர்ஜுன் நடித்திருக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியானது. இதனையடுத்து கேங்ஸ்டர் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைதான் லியோ படத்தின் கதை என ரசிகர்கள் யூகித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











