150 ரூபாய் டிக்கெட் 1800 ரூபாய்..வேணுமா? வேணாமா.. கள்ளச்சந்தையில் விற்கப்படும் லியோ டிக்கெட்!

சென்னை: குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வெளியே ரூ.150 டிக்கெட் 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியானது.

 Leo film tickets are sold in the fake market for Rs 1800 in chennai

பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு படம் வெளியானதையடுத்து, தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர்.

விறுவிறுப்பான முதல் பாதி: லியோ படம் பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் வேகமாக இருக்கிறது என்றும், முதல் பாதி போவதே தெரியாது. லோகேஷின் படம் எப்போதும் அப்படித்தான் இருக்கும். இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. ஆனால் கிளைமேக்ஸ் நெருங்கும்போது விறுவிறுப்படைகிறது என்று ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தரமான பிஜிஎம்: கழுதைப்புலிகள் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது என்றும், அனிருத்தின் இசை, பிஜிஎம் என அனைத்தும் சும்மா தரமா இருக்கு, லோகேஷ் கனகராஜ் செல்வது போல படத்தின் முதல் பத்து நிமிஷமும், கடைசி 40 நிமிஷமும் லோகேஷ் கலக்கிவிட்டார் என்று படம் பார்த்தவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி ஆக்ஷன்: படத்தில் வன்முறை கெட்டவார்த்தைகள் போதை பொருள் என பல இருப்பதால், 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படம் பார்க்க முடியாது என்று சொல்லப்பட்டபோது தியேட்டருக்கு பெண்கள் குழந்தைகள் வந்திருந்தார்கள். முழுமையான ஆக்சன் படம் என்று லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 Leo film tickets are sold in the fake market for Rs 1800 in chennai

150 ரூபாய் டிக்கெட் 1800 ரூபாய்: லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 150 ரூபாய் டிக்கெட் கள்ளச்சந்தையில் 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கு லியோ படத்திற்கான டிக்கெட் கிடைக்காத நிலையில், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அதிகமான டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டு பின் பேரம்பேசி 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதையும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் வாங்கி படம் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X