Leo First Look - லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காப்பியா?.. ஆரம்பித்தது பஞ்சாயத்து
சென்னை: Leo First Look (லியோ ஃபர்ஸ்ட் லுக்) லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலிருந்து காப்பியடிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர்களில் ஒருவர் விஜய். கமர்ஷியல் பாதையில் யாராலும் வீழ்த்த முடியாத தளபதியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிய அந்தப் படம் விஜய்க்கு வருந்தக்கூடிய ரிசல்ட்டையே கொடுத்தது. இதன் காரணமாக நிச்சயம் ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அவருக்கு பலமாக லோகேஷ் கனகராஜ் நின்றுகொண்டிருக்கிறார்.

மாஸ்டர்: இருவரும் இணைந்து ஏற்கனவே மாஸ்டர் என்ற படத்தை கொடுத்தனர். அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. மேலும் படத்தில் விஜய்யின் கேரக்டரான ஜேடி பலரது ஃபேவரைட்டாக மாறியது. குறிப்பாக படத்தில் பல ஸ்டீரியோ டைப்புகளை லோகேஷ் உடைத்திருந்தார். இதனால் லியோவிலும் இருவரும் இணைந்து பக்கா ஆக்ஷன் படத்தை புதுமையாக கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகரக்ளிடம் நிறையவே இருக்கிறது.
பான் இந்தியா படம்: லியோ படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை இப்போது எட்டியிருக்கும் சூழலில் விஜய்க்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக லோகேஷ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். எனவே இந்த மாத இறுதிக்குள் ஷூட்டிங் நிறைவடைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் திரைத்துறையினர்.
ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் விஜய் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். எனவே ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ். கையில் சுத்தியலுடன் இருக்கும் விஜய்க்கு பின்னால் ஓநாய் ஒன்று கத்திக்கொண்டிருப்பது போலவும் காஷ்மீர் மலை தொடர்கள் இருப்பது போலவும் அந்தப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பயங்கரமாக ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

காப்பியா?: ஆனால் லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து இப்போது புதிய பஞ்சாயத்து ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது உலக புகழ்பெற்ற வெப் தொடர்களில் ஒன்றுதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். அந்தத் தொடரில் ஜான் ஸ்னோ என்ற கதாபாத்திரம் ஒன்று வரும். அந்தக் கதாபாத்திரத்திற்கான போஸ்டரிலும் அவர் கையில் வாளுடன் இருக்கும்போது அவருக்கு பின்னால் ஓநாய் ஒன்று இதேபோன்று கத்திக்கொண்டிருக்கும்.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதனையடுத்து அந்தப் போஸ்டரையும், லியோ போஸ்டரையும் ஒப்பிட்டு லோகேஷ் கனகராஜ் காப்பி அடித்துவிட்டார் என ரசிகர்கள் சிலர் கூறிவருகின்றனர். ஆனால் அதற்கும் இதற்கு துளிக்கூட சம்பந்தமில்லை ஓநாய் ஒன்றுதான் பொதுவாக இருக்கிறது என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.இதற்கிடையே லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு அந்தப் பாடல் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











