LEO First Single- விஜய் ரசிகர்களே ரெடியா?.. நா ரெடி எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: LEO First Single (லியோ முதல் சிங்கிள்) லியோவின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். சஞ்சய் தத், அர்ஜுன்,மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். காஷ்மீரில் முதல் ஷெட்யூல் முடிந்து அடுத்ததாக சென்னையில் ஸ்டூடியோக்களிலும், அவுட் டோரிலும் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.

LEO First Single Naa Ready song will be out at 6:30PM

பாடல் ஷூட்டிங்: ஆதித்யராம் ஸ்டூடியோவில் சமீபத்தில் 2000 நடன கலைஞர்களுடன் விஜய் நடனம் ஆடும் பாடல் படமாக்கி முடிக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பாளராக பணியாற்றினார். விஜய்யுடன் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன் உள்ளிட்டோரும் பாடலில் நடனம் ஆடியதாகவும், சஞ்சய் தத் தனது கேங்குடன் அந்தப் பாடலில் தோன்றுவார் என்றும் கூறப்பட்டது.

முதல் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய்யின் 49ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி முதல் பாடலான நா ரெடி இன்று வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதற்கான ப்ரோமோவும் ரிலீஸ் செய்யப்பட்டது. பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அனிருத், பிக்பாஸ் அசல் கோளாறு உள்ளிட்டோரும் பாடியிருக்கின்றனர். நா ரெடிதா வரவா அண்ணன் இறங்கி வரவா என தொடங்கும் அந்தப் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

LEO First Single Naa Ready song will be out at 6:30PM

எப்போது ரிலீஸ்: இந்நிலையில் நா ரெடிதா பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எத்தனை மணிக்கு வெளியாகும் என தெரியாமல் ரசிகர்கள் இருந்தனர். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு நா ரெடி பாடல் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே விஜய் ரசிகர்கள் 6.30 மணியை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: முன்னதாக விஜய் பிறந்தநாளுக்கு முதல் சிங்கிள் வெளியாகும் என்ற அப்டேட்டோடு நிறுத்தியிருந்தது படக்குழு. திடீரென நேற்று மாலை நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.அதன்படி ஃபர்ஸ்ட் லுக்கும் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.கையில் ரத்தம் தெறிக்க சுத்தியலோடு ஃபர்ஸ்ட் லுக்கில் காட்சியளித்திருந்தார் விஜய். அது இணையத்தில் செம ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் எப்போது நிறைவு?: இதற்கிடையே சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஷூட்டிங் குறித்தான அப்டேட்டை வெளியிட்டிருந்தார். அதன்படி விஜய்க்கு இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது என தெரிவித்திருந்தார். ஷூட்டிங்கை முடித்துவிட்டு சின்னதாக ரெஸ்ட் எடுக்கும் விஜய் ஜூலை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் படத்துக்கு டப்பிங் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X