Leo Free Tickets: “மூனு பொருள் வாங்கினா லியோ டிக்கெட் Free..” என்னய்யா நடக்குது அங்க..?

சிங்கப்பூர்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸான லியோ, இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

அதேநேரம் லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என நெகட்டிவான விமர்சனங்களும் வெளியாகின.

இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மூன்று ஸ்கின்கேர் பொருட்கள் வாங்கினால், லியோ டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Leo Free Tickets: Vijays Leo tickets are sold for free in the supermarket

மூனு பொருள் வாங்கினா லியோ டிக்கெட் ஃப்ரீ
விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த லியோ, கடந்த வாரம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஷூட்டிங் தொடங்கியது முதலே லியோ படத்துக்கு பெரியளவில் பில்டப் கொடுக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பெரிய மல்டி ஸ்டார்ஸ் இணைந்ததும் அதிக ஹைப் கொடுத்தது. அதன்படி, லியோ ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் வேற லெவலில் இருந்தது. பல ஏரியாக்களில் லியோவுக்கு முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இதன் காரணமாக லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான நெகட்டிவான விமர்சனங்களால் லியோவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் டிக்கெட் புக்கிங்கும் டல்லடிக்க ஆரம்பித்தது. இதனால் லியோ ப்ளாக் பஸ்டர், லியோ டிசாஸ்டர் என இருவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.

அதேபோல், லியோ டிக்கெட் புக்கிங்கில் மோசடி என்றும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் தயாரிப்பு நிறுவனம் தவறான ரிப்போர்ட் கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இன்னொரு பக்கம் லியோ படத்தின் வெற்றி விழாவை கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் லியோ படத்தின் டிக்கெட்டுகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

 Leo Free Tickets: Vijays Leo tickets are sold for free in the supermarket

அதாவது சூப்பர் மார்க்கெட்டில் 3 ஸ்கின் கேர் லோஷன் வாங்கினால் ஒரு லியோ டிக்கெட் இலவசம் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் லியோ படத்துக்கா இந்த நிலை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X