LEO: அட இது எப்போ... லியோ விக்ரம் படத்தின் Prequel-ஆ..? இந்த செல்ஃபியில் இருக்கும் உண்மை!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்ட லோகேஷ், அடுத்து சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

லியோ திரைப்படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் லியோ, விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 LEO: Gautham Menon and Maya Krishnans selfie on the set of Leo is trending

லியோ விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் : விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், LCU கான்செப்ட்டில் தான் இருக்கும் என்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக லியோ உருவாகி வருவதாக தெரிகிறது.

லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனும் லியோவில் இணைந்துள்ளார். லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் மாயா கிருஷ்ணனும் கெளதம் மேனனும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்திருப்பார் மாயா கிருஷ்ணன். ரெட் லைட் ஏரியாவின் கால் கேர்ளான மாயா கிருஷ்ணா, கமலின் கஸ்டமராக நடித்திருப்பார். முக்கியமாக இந்த காட்சியில் மாயா கிருஷ்ணனின் வாய்ஸ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொரு காட்சியில் ஃபஹத் பாசிலுடன் அதே கால் கேர்ளாக நடித்திருப்பார்.

 LEO: Gautham Menon and Maya Krishnans selfie on the set of Leo is trending

விக்ரம் படத்தில் நடித்தது மொத்தமே இரண்டு காட்சிகள் என்றாலும், மாயா கிருஷ்ணனின் சவுண்ட் தான் அவரை ரசிகர்களின் மனதில் நிலைக்க வைத்தது. இறுதியாக அவரை விஜய் சேதுபதி கொலை செய்துவிட்டதை போல காட்டியிருப்பார் லோகேஷ். இந்நிலையில், லியோ படத்தில் மாயா கிருஷ்ணன் இணைந்திருப்பது, இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

லியோவில் மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளது, இந்தப் படம் விக்ரமின் ப்ரீக்வெல்லாக இருக்கும் என யூகிக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவாக நடித்த டான்ஸர் வசந்தி லியோவில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மாயா கிருஷ்ணனும் லியோவில் இணைந்துள்ளார். இந்த இரண்டு கேரக்டர்களுமே விக்ரம் படத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 LEO: Gautham Menon and Maya Krishnans selfie on the set of Leo is trending

இதனால், விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் தான் லியோ என ரசிகர்கள் சீரியஸ்ஸாக டிஸ்கஸ் செய்து வருகின்றனர். அதேபோல், இது கைதி படத்தின் சீக்வெல்லாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கைதியில் போலீஸாக கலக்கிய நடிகர் ஜார்ஜ் மரியானும் லியோவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல், லியோ படத்திலும் அப்படியொரு கேரக்டர் இருப்பதாகவும், அதில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கெளதம் மேனனும் மாயா கிருஷ்ணனும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X