Leo: லியோ செட்டிலிருந்து லீக்கான கெளதம் மேனன் போட்டோ... அப்போ விஜய் ரோல் இதுதானா..?
சென்னை: விஜய்யின் லியோ மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.
விஜய்யுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், த்ரிஷா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லியோவில் கெளதம் மேனன் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
அதுமட்டும் இல்லாமல் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கெளதம் மேனனின் போட்டோவும் வெளியாகியுள்ளது.

லீக்கான கெளதம் மேனன் போட்டோ: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ செகண்ட் சிங்கிள் உட்பட ஆடியோ லாஞ்ச், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட கெளதம் மேனனின் போட்டோ வைரலாகி வருகிறது.
முக்கியமாக கெளதம் மேனனின் போட்டோ மூலம், விஜய்யின் கேரக்டர் பற்றியும் லீட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன் ஆகியோர் லீடிங் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கெளதம் மேனனுக்கு விஜய்யுடன் தான் அதிக காட்சிகள் இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
அதாவது, லியோ படத்தில் தனது கேரக்டர் விஜய்யுடன் பயணிப்பதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கெளதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால், விஜய்யுடன் இவரும் கேங்ஸ்டர் கேங்கில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள கெளதம் மேனனின் போட்டோ, ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

போலீஸ் படங்கள் இயக்குவதில் ஸ்பெஷலான கெளதம் மேனன், லியோவில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் யூனிஃபார்முடன் இருக்கிறார் கெளதம் மேனன். லியோவில் நடித்துள்ள பாபு ஆண்டனி, அவரது மகன் ஆர்தர் ஆகியோருடன் போலீஸ் யூனிஃபார்மில் போட்டோ எடுத்துள்ளார் கெளதம் மேனன். இந்த போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
லியோ படம் முழுக்க விஜய்யுடன் பயணிக்கும் ரோல் என்பதால், கெளதம் மேனனின் கேரக்டரும் கெட்டப்பும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். இதனால், விஜய்யும் கேங்ஸ்டராக இல்லாமல் 'விக்ரம்' பட கமல்ஹாசன் போல, ஸ்பை ஏஜெண்டாக நடித்திருக்கலாமோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும், போலீஸ் கெட்டப்பில் இருக்கும் கெளதம் எப்படி விஜய்யுடன் படம் முழுக்க பயணிப்பார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











