Leo: கமல் வாய்ஸ் ஓவர்... ஃபஹத் பாசில் என்ட்ரி... இனி எதுவும் மறைக்க முடியாது... லியோ சஸ்பென்ஸ் ஓவர்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ, தளபதி 68 பட அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், விஜய்யின் லியோ கிளிம்ப்ஸ் வீடியோ கமலின் வாய்ஸ் ஓவரில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Leo glimpse with Kamal Haasans voice-over will be released on Vijays birthday

கமல் வாய்ஸ் ஓவரில் லியோ கிளிம்ப்ஸ்:விஜய்யின் 67வது படமான லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் என ப்ரீ தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் தாறுமாறாக சம்பவம் செய்து வருகிறதாம்.

மாநாடு, கைதி, மாஸ்டர், விக்ரம் என மேக்கிங்கில் மிரட்டிய லோகேஷ் லியோவிலும் தனது ஸ்டைலில் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது விக்ரம் படத்தின் முந்தைய பகுதியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டினா, நரேன், மாயாகிருஷ்ணன் ஆகியோர் லியோவிலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பில் ஃபஹத் பாசிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் அமர் என்ற சீக்ரெட் ஏஜெண்ட் கேரக்டரில் நடித்திருந்த ஃபஹத், லியோவில் கீ ரோலில் நடிக்கிறாராம். இந்த கேரக்டர் தான் லியோ படத்தில் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் லியோ ஷூட்டிங் ரொம்பவே சீக்ரெட்டாக நடைபெற்று வருகிறதாம்.

 Leo glimpse with Kamal Haasans voice-over will be released on Vijays birthday

ஆனாலும், லியோ படத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் செய்தி மெல்ல மெல்ல வெளியே தெரியவந்துள்ளது. இதையெல்லாம் விட இன்னொரு முக்கியமான அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் லியோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ கமல் வாய்ஸ் ஓவரில் வெளியாகும் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த அப்டேட்டால் கோலிவுட் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அப்படி கமல் வாய்ஸ் ஓவரில் வெளியானால் லியோ படத்தில் அவரும் நடித்திருக்கலாம் என தெரிகிறது. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X