Leo gold Coin: தயாராகும் லியோ கோல்ட் காயின்.. வெற்றிவிழா கொண்டாட்டத்தில் வழங்க திட்டம்!

சென்னை: விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான நிலையில், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்த 11 நாட்களில் இந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leo gold coin to be issued to the Team in its success meet

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. வட இந்தியாவில் இந்தப்படத்தின் வசூல் மட்டுப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் குறையும் நீங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் படம் 32 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

லியோ வசூல் நிலவரம்: இதனிடையே உலகளவில் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் கடந்த 11 நாட்களில் 500 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இதன்மூலம் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ள விஜய்யின் முதல் படம் என்ற பெருமையையும் லியோ படம் தட்டிச் சென்றுள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 148 கோடி ரூபாய்களை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்தப் படத்தின் வசூல் தொடர்ந்து சிறப்பாக அமைந்து வருகிறது.

லியோ சக்சஸ் மீட்: இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை காட்டி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய்யை, அவரது பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே இந்தப் படத்தின் சக்சஸ் மீட் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இதற்கான அனுமதிக்காக தயாரிப்பாளர் லலித்குமார் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதியை காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளுடன் அளித்துள்ளனர்.

Leo gold coin to be issued to the Team in its success meet

லியோ தங்க நாணயம்: இதையடுத்து நவம்பர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் லியோ என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை படக்குழுவினர் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த சக்சஸ் மீட் மிகவும் கலர்புல்லாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்தத் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்: இசை நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சை மிஸ் செய்த ரசிகர்கள் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரது பேச்சை கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் தங்க நாணயம் போன்ற பல சர்ப்ரைஸ் கொண்டாட்டங்களும் இணையவுள்ளது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X