Leo: காஷ்மீர் ஜெயிலுக்குள் கைதியாக விஜய்.. பிரசாத் லேப்பில் என்ன சீன் எடுக்கிறாங்க தெரியுமா?

சென்னை: வாரிசு படத்தின் ஏகப்பட்ட மேக்கிங் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்தன. ஆனால், லியோ படத்தில் இருந்து அதுபோல எந்தவொரு காட்சிகளும் இதுவரை பெரிதாக கசியவில்லை.

ஆனால், பிரசாத் லேப்பில் என்ன மாதிரியான செட் போட்டு லியோ படத்தை இயக்கி வருகின்றனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், கவுதம் மேனனுக்கு என்ன ரோல் என்பது குறித்தும் சீக்ரெட்கள் கசிந்துள்ளன.

Leo Hot Update: Kashmir Jail scenes taking in Prasad Lab?

த்ரிஷாவின் அப்பா கவுதம் மேனன்: கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி என இதுவரை 4 முறை விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை த்ரிஷா 5வது முறையாக பல ஆண்டுகால கேப்பிற்கு பின்னர் லியோ படத்தில் இணைந்துள்ளார்.

விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்க ஆரம்பித்து அந்த படத்தை இயக்க முடியாமல் கைவிடப்பட்ட நிலையில், இயக்குநர் கவுதம் மேனனும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் த்ரிஷாவின் அப்பாவாக கவுதம் மேனன் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

Leo Hot Update: Kashmir Jail scenes taking in Prasad Lab?

காஷ்மீர் ஜெயிலில் கைதியாக விஜய்: லியோ படத்தில் ஒரு பெரிய சம்பவம் செய்து விட்டு நடிகர் விஜய் காஷ்மீர் ஜெயிலில் அடைத்து வைக்கப்படுகிறார். அவரை ஜெயிலில் சந்திக்க மனைவி த்ரிஷா, குட்டி மகள், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஷூட்டிங் சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் விஜய் கைதியாக லியோவில் உள்ள நிலையில், எல்சியூ கனெக்ட் ஆக மாறுமா? இல்லை ஸ்டாண்ட் அலோன் படமாக இந்த படம் இருக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

Leo Hot Update: Kashmir Jail scenes taking in Prasad Lab?

காஷ்மீர் ஜெயிலான பிரசாத் லேப்: விஜய்யின் வீடு போன்ற செட்டப்பை தான் பிரசாத் லேப்பில் போட்டு படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காஷ்மீர் ஜெயிலையே இங்கே பிரசாத் லேப்பில் தான் போட்டு பனிப்புகையெல்லாம் போட்டு குல்லா போட்டுக் கொண்டு அடிக்கிற சென்னை வெயிலில் காஷ்மீர் போன்ற காட்சிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேட்ச் பண்ணி இயக்கி வருவதாக கூறுகின்றனர்.

Leo Hot Update: Kashmir Jail scenes taking in Prasad Lab?

உறவினர்களுக்குள்ளே த்ரோகம், வில்லங்கம் என லியோ படத்தின் கதை வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருக்கும் என்றும் தன்னை பார்க்க வந்த குடும்பத்தினரை ரொம்பவே சோகத்துடன் நடிகர் விஜய் காணும் காட்சிகள் நிச்சயம் சென்டிமென்ட்டாக ரசிகர்களை கவரும் என பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X