Leo IMAX: லியோவில் அடுத்த சர்ப்ரைஸ்... IMAX கன்ஃபார்ம்... மிரட்டலாக வெளியான விஜய் போஸ்டர்!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ.

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், வரும் 19ம் தேதி வெளியாகிறது.

 Leo IMAX: Vijays Leo will be released in IMAX

லியோவில் ரசிகர்களுக்கு ஏராளமான சர்ப்ரைஸ்கள் இருப்பதாக படக்குழு அடுத்தடுத்து அறிவித்து வந்தது.

அந்த வரிசையில் தற்போது லியோ ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

ஐமேக்ஸில் வெளியாகும் லியோ
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய், அடுத்தடுத்து மரண மாஸ் ஹிட் கொடுத்து வருகிறார். இந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், லலித் குமார் என 'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் லியோவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய லியோ ஷூட்டிங், ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக 120 நாட்களில் லியோ படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் அசுர வேகத்தில் முடித்த லோகேஷ், தற்போது ப்ரோமோஷனில் பிஸியாகிவிட்டார். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ள லியோவில் ரசிகர்களுக்கு ஏராளமான சர்ப்ரைஸ் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார்.

 Leo IMAX: Vijays Leo will be released in IMAX

அதன்படி, லியோ ட்ரெய்லரில் விஜய்யும் லோகேஷும் இணைந்து செம்ம ஹைப் கொடுத்திருந்தனர். அந்த வரிசையில் லியோவில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அப்டேட், ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதாவது லியோ ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இதுபற்றி செய்திகள் வெளியான நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனமே கன்ஃபார்ம் செய்துவிட்டது.

அதுமட்டும் இல்லாமல், ஐமேக்ஸ் டெக்னாலஜியில் மிரட்டலான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். சிங்கத்தின் கர்ஜனை, கைகளில் தீபந்தத்துடன் விஜய் என தாறுமாறாக உள்ளது இந்த போஸ்டர். ஐமேக்ஸ் அப்டேட் போஸ்டரே தரமாக இருப்பதால், மொத்த படமும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வனை தொடர்ந்து விஜய்யின் லியோவும் ஐமேக்ஸில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், லோகேஷ் கனகராஜ் அடுத்த இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளார். இந்தப் படம் முழுவதும் ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்யவிருப்பதாக லோகேஷ் கூறியிருந்தார். இதனால் இப்போது லியோவை கடந்து ரஜினியின் தலைவர் 171 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X