லியோ இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர்.. ரெக்கார்ட் பிரேக்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ படம் வெளியாகி 25வது நாளானதை முன்னிட்டு படக்குழு சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

இந்த படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
முதல் வார வசூல்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான லியோ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் போன்று என ரசிகர்கள் கூறிவந்தனர். இதனால், லியோ படத்திற்கு மோசமான விமர்சனம் வந்த போதும், முதல் வார முடிவில் உலகளவில் ரூ.461 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பலவிதமான சர்ச்சை: லியோ படம் வெளியாவதற்கு முன்பாக எப்படி சர்ச்சை இருந்ததோ, அதே போல படம் வெளியான பின்பும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. திரையரங்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வேண்டும் என்பதால், தயாரிப்பாளர் லலித்குமார், சொந்த காசை போட்டு டிக்கெட் புக் செய்து படத்திற்கு கூட்டம் வருவது போல் காண்பிக்கிறார் அதிர்ச்சி தகவல்களை கூறியிருந்தார்.
540 கோடி வசூல்: இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத தயாரிப்பு நிறுவனம், 12 நாட்களில் சுமார் 540 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. மேலும், நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் அழ்த்தியது.
சாதனை போஸ்டர்: இந்நிலையில்,லியோ படம் வெளியாகி 25 நாட்கள் ஆனநிலையில், செவன் ஸ்கிரீன்ரீன்ஸ் ஸ்டுடியோ சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர் லியோ தான் என்றும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் முதல் வரிசையில் லியோ இடம் பிடித்து விட்டது என்றும் 100 கோடி ஷேரை தமிழ்நாட்டில் லியோ பெற்றுள்ளது என்றும் இலங்கை, இங்கிலாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் லியோ தான் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











