Leo Industry Hit: “லியோ கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் தான்..” அடிச்சு சொல்லும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ இன்று வெளியானது.
திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள லியோ, கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் லியோ வசூல் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் தான்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் - அனிருத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ, தரமான சம்பவமாக அமைந்துள்ளது. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் வேற லெவலில் வைப் காட்டியுள்ளதாக கூறிய ரசிகர்கள், அவரது டான்ஸ் செம்ம மாஸ் எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
முக்கியமாக ரசிகர்களை விட பெண் ரசிகைகள் பலரும் லியோ படத்திற்கு ஃபயர் விட்டு வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் ஆக்ஷனும் எதிர்பார்க்கவே இல்லை என்றும், இதற்கு முன்னாடியும் இனிமேலும் இப்படியொரு படம் பார்க்கவே முடியாது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், லியோ படத்தை ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை செம்மையாக என்ஜாய் செய்தோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் ஆக்ஷன், டான்ஸ் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவரது காமெடி செம்ம மஜா என்றும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், படத்தில் எந்த காட்சியும் போர் அடிக்கவே இல்லை எனக் கூறிய ரசிகர்கள், லியோ கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் தான் என அடித்து சொல்கின்றனர். இதனால், டிவிட்டரில் லியோ இண்டஸ்ட்ரி ஹிட், இண்டஸ்ட்ரி ஹிட் என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











