Vijay - ஷாருக்கானை முந்திய விஜய்.. இந்தியாவில் அவர் படம்தான் டாப்.. தயாரிப்பு நிறுவனம் சொன்ன செம விஷயம்
சென்னை: விஜய் கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியதை அடுத்து இன்னும் ஒரு படத்தில் நடித்துமுடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். தற்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, அட்லீ உள்ளிட்டோரில் ஒருவர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த வருடம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்களில் விஜய் படம் டாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். அவர் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக் இல்லை: இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று பரவலான பேச்சு எழுந்தது. ஆனால் அதனை இயக்குநர் வெங்கட் பிரபு திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற பெரும் வெற்றி படத்தை வெங்கட் பிரபு கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கண்டிப்பாக GOAT படத்தின் மூலம் மெகா ஹிட்டை பரிசாக கொடுப்பார் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமான படம்: GOAT படம் விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு வெளியான லியோ திரைப்படம் பயங்கரமாக அடி வாங்கியது. திரைக்கதையிலோ, கதையிலோ ஒன்றுமே இல்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இதனால் விஜய்யும் கொஞ்சம் அப்செட் என்றே சொல்லப்பட்டது.
லோகேஷின் சறுக்கல்: அதிலும் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று வரிசையாக நான்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு லியோ படம் முதல் சறுக்கலாகவே கருதப்பட்டது. மேலும் படத்தில் இடம்பெற்ற ப்ளாஷ்பேக் போர்ஷன், கிறிஸ்தவ மதத்தில் நரபலி கொடுப்பது போன்ற காட்சிகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. இருந்தாலும் படமானது உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் டாப்: இந்நிலையில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் காந்த 2023ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்களில் லியோ படம்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறதாம். அதற்கு அடுத்தபடியாக சலார், வாரிசு, துணிவு, ஜவான், ஆதிபுருஷ், பதான், டன்கி ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் கடந்த வருடம் லியோ திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அட இந்திய அளவில் ஷாருக்கானை முந்திவிட்டாரே விஜய். எப்போதும் தளபதி விஜய் மாஸ்தான் என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸை செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











