Leo: விஜய்க்காக இணையும் கமல், விக்ரம், தனுஷ்... லியோ இசை வெளியீட்டு விழாவிலும் சம்பவம் தானா?

சென்னை: விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Leo: Kamal, Vikram & Dhanush To Grace The Audio Launch Of Leo Film

லியோ இசை வெளியீட்டு விழாவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்: வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் இண்டஸ்ட்ரியே இந்தப் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ, LCU கான்செப்ட்டில் உருவாகியிருக்கும் என்பதே இந்தளவு ஹைப் ஏற்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளார் விஜய். அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதுவும் லியோ படத்தை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் லியோ படப்பிடிப்பை 125 நாட்களில் முடித்துவிட்ட லோகேஷ், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

இன்னொரு பக்கம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லியோ இசை வெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது சென்னை தான் என கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மலேஷியாவில் நடைபெறலாம் என சொல்லப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா, திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

ஆனால், தற்போது அதுபற்றிய ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், தனுஷ் மூவரும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. விக்ரம் திரைப்படம் மூலம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தார் லோகேஷ். அதேபோல், விரைவில் விக்ரம், தனுஷ் ஆகியோரின் படங்களையும் லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் பிளான் செய்து தான், லியோ இசை வெளியீட்டு விழாவில் கமல், விக்ரம், தனுஷ் மூவருக்கும் அழைப்புவிடுத்துள்ளாராம் லோகேஷ். இதற்கு விஜய்யும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதேநேரம், கமல், விக்ரம், தனுஷ் தரப்பில் இருந்தும் விரைவில் க்ரீன் சிக்னல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அப்படி அவர்கள் கலந்துகொள்ளவிருந்தால், லியோ இசை வெளியீட்டு விழாவில் தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவிலும் பல டாப் ஹீரோக்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே லண்டனில் லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் செப்டம்பர் 7ம் தேதியே தொடங்கவுள்ளதாம். இதனால் லண்டனில் இருக்கும் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X