Leo: “விஜய்க்கும் லோகேஷுக்கும் என்ன மோதல்... லியோ LCU மூவியா..?” லலித் குமார் கொடுத்த விளக்கம்!

சென்னை: லியோ ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளன.

விரைவில் துபாயில் பிரம்மாண்டமான முறையில் லியோ ப்ரொமோஷன் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லியோ படப்பிடிப்பின் போது, விஜய் - லோகேஷ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

அதுபற்றியும் லியோ திரைப்படம் LCU-இல் உருவாகியுள்ளதா என்பது குறித்தும் தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

 Leo: Lalit Kumar cleared There is no fight between Lokesh and Thalapathy

விஜய்க்கும் லோகேஷுக்கும் என்ன மோதல்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. ஏற்கனவே இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், லியோ ட்ரெய்லரை கொஞ்சம் சீக்கிரமாகவே ரிலீஸ் செய்தது. அதேபோல், லியோ ப்ரொமோஷன் வேலைகளும் அசுர வேகத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே லியோ ட்ரெய்லர் ரிலீஸானதை அடுத்து, ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார் தயாரிப்பாளர் லலித் குமார்.

அப்போது பேசிய அவர், லியோ படம் பற்றிய செம்ம மாஸ்ஸான அப்டேட்களை கூறினார். முக்கியமாக இப்போது பலருக்கும் லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையுமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கே பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கும். அப்போது லியோ LCU படமா என்பதை நீங்களே தெரிந்துகொள்வீர்கள் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், லியோ படப்பிடிப்பின் போது விஜய்க்கும் லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் இடையே மோதல் என தகவல் வெளியானது. அதனால், லியோ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை லோகேஷின் அசோஷியட் ரத்னகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் சுத்த வடிக்கட்டின பொய் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பயோவில், இரு தினங்களுக்கு முன்னரே 'லியோ' படத்தின் பெயரையும் இணைத்தார்.

இதனால் நீண்ட நாட்களாக இருந்த ரசிகர்களின் சந்தேகத்திற்கு தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், இசை வெளியீட்டு விழா கேன்சலானதால், துபாயில் லியோ டீம் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக லியோ படத்தை ஒருநாள் முன்னதாக தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுபற்றி தயாரிப்பாளர் லலித் குமார் அப்டேட் கொடுத்ததாக தெரியவில்லை. லியோ படத்தின் FDFS, ஸ்பெஷல் ஷோக்களுக்கு தமிழ்நாட்டில் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால், 18ம் தேதியே ப்ரீமியர் ஷோ திரையிடப்படலாம் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X