LEO LCU: ஒரேயொரு ட்வீட் தான்... LEO LCU சர்ப்ரைஸ்ஸை சோலி முடித்த உதயநிதி... லோகேஷ் புலம்பல்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படம் நாளை முதல் உலகெங்கும் ரிலீஸாகிறது.

லியோ திரைப்படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளதா என ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர்.

லோகேஷ் அதுபற்றி சர்ப்ரைஸ் கொடுத்த வந்த நிலையில், லியோ படம் பார்த்த உதயநிதி, லியோ LCU மூவி என்ற ரகசியத்தை உடைத்துவிட்டார்.

 LEO LCU: Udayanidhi has given an update on Vijays Leo LCU movie

விஜய்யின் லியோ LCU மூவி தான்!
விஜய்யின் லியோ திரைப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

லியோ பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியான நாள் முதலே, ரசிகர்களிடம் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. முக்கியமாக லியோ லோகேஷின் யூனிவர்ஸான LCU-ல் உருவாகும் மூவியா என கேள்விகள் எழுந்தன. ஆனால், இதுவரை அதுபற்றி லோகேஷ் கனகராஜ் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. அதேபோல், லியோ ட்ரெய்லரிலும் அதற்கான லீட் எதுவும் இல்லை.

லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய லோகேஷ், LCU பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது, ஆனால் சர்ப்ரைஸ் இருக்கும் என்பதை மட்டும் தெளிவாகக் கூறியிருந்தார். அதேபோல், தயாரிப்பாளர் லலித் குமார், அசோசியேட் டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரும் லியோ LCU மூவியா என்பது குறித்து வாயே திறக்கவே இல்லை. இப்படி மொத்த படக்குழுவினரும் பொத்தி பொத்தி வைத்த ரகசியங்களை உதயநிதி ஒரே ட்வீட்டில் காலி செய்துள்ளார்.

 LEO LCU: Udayanidhi has given an update on Vijays Leo LCU movie

லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனது முதலே, விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே மோதல் என செய்திகள் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக லியோ படம் வெற்றிப் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார் உதயநிதி. லியோ படத்தை உதயநிதிக்காக ஸ்பெஷலாக திரையிட்டு காட்டப்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் லியோ படம் பற்றி உதயநிதியும் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "தளபதி விஜய் அண்ணாவின் லியோ, லோகேஷின் தரமான மேக்கிங்கில் உருவாகியுள்ளது" என அனிருத், அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆகியோரை டேக் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் "All the best team!" என லியோ படக்குழுவினரை வாழ்த்தியுள்ள உதயநிதி, LCU என்ற ஹேஷ் டேக்கையும் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் லியோ LCU மூவியாக உருவாகியுள்ளது என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

 LEO LCU: Udayanidhi has given an update on Vijays Leo LCU movie

இதனால், விஜய் ரசிகர்கள் செம்ம வைப்பில் உள்ளனர். மேலும், லியோவில் கமல், ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்திருக்கலாம் அல்லது அவர்களின் வாய்ஸ் ஓவர் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்த்துள்ளனர். கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து லோகேஷின் LCU-ல் மூன்றாவது படமாக இணைகிறது லியோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X