Leo: "லியோ ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன..? ஆட்சிய புடிச்சிட்டா போச்சு.." விஜய் ரசிகர்கள் வெறித்தனம்!
சென்னை: லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் 30ம் தேதி நடைபெறவிருந்தது.
ஆனால், எதிர்பாராதவிதமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது.

பாதுகாப்பு காரணங்களால் தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதற்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என, விஜய் ரசிகர்கள் போஸ்டரில் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆட்சிய புடிச்சிட்டா போச்சு!!: விஜய்யின் லியோ படத்துக்கு திரையுலகில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வரிசையில் லியோ இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என சொல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. ஆனால், திடீரென லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. அதிகளவில் என்ட்ரி பாஸ் கேட்டு கோரிக்கை வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் ஏற்படலாம் என்பதால், ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.
ஆனாலும் இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என விஜய் ரசிகர்களும், மக்கள் இயக்க நிர்வாகிகளும் கருத்துத் தெரிவித்து வந்தனர். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லப்படுவதால், அவருக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆதரவாக #WestandwithVijay உட்பட பல ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகின. இதனால் ரசிகர்களை கூல் செய்வதற்காக லியோ செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என நேற்று அறிவித்தது.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில், "ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன! ஆட்சிய புடிச்சிட்டா போச்சி!! என்ன நண்பா?" என்ற கேப்ஷனுடன் விஜய்யின் கெத்தான போட்டோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு அரசியல் அழுத்தம் இல்லை என படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் இதனை அரசியல் நெருக்கடி தான் என கூறிவருவதோடு, போஸ்டர்கள் ஒட்டியும் வெறித்தனம் காட்டி வருகின்றனர். முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மட்டும் தான் அனுமதி என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த போஸ்டர் பற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "'ஆ'வுக்கு 'ஆ' ரைமிங். ஆட்சியை பிடிக்க தயாராகிறாரா விஜய்?" என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது டிவிட்டர் பதிவின் கீழே விஜய் ரசிகர்களும் அதிரடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











