Leo: “தொடங்கியது லியோ அட்வான்ஸ் புக்கிங்..” ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்!!
கோவை: விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் 15ம் தேதி முதல் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், இப்போதே லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய நிலையில், அதுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

லியோ அட்வான்ஸ் புக்கிங் ஓபன்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகும் லியோ படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் கேரியரில் இந்தளவு எதிர்பார்ப்பை எகிற வைத்தது லியோ மட்டுமே என அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர். மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இதில் இணைந்துள்ளதே அதற்கான காரணமாகும்.
லலித் குமார் தயாரிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லியோ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய்யுடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கான பெர்மிஷன் கிடைப்பது சந்தேகம் என சொல்லப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக முதல் நாளான 19ம் தேதி கூடுதலாக இரண்டு காட்சிகளுக்கும், 20 முதல் 24ம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி என மொத்தம் 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனால், உற்சாகத்தில் மிதந்த விஜய் ரசிகர்களுக்கு, லியோ ஐமேக்ஸில் வெளியாகிறது எனவும் படக்குழு அபிஸியலாக அறிவித்தது. இதனால் லியோ அட்வான்ஸ் புக்கிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் 15ம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், கோவையில் இன்று (அக்.12) முதல் லியோவுக்கான புக்கிங் தொடங்கியுள்ளது. கோவையின் பிரபலமான கேஜி சினிமாஸ், லியோ படத்திற்கான ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளது. அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வேகத்தில் அனைத்து ஷோக்களுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
அதேநேரம், இது இரண்டாவது நாளுக்கான டிக்கெட் புக்கிங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான 19ம் தேதி டிக்கெட் புக்கிங் இன்னும் ஓபன் ஆகவில்லை. இதனால், முதல் நாளில் லியோ படம் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேபோல், லியோ அதிகாலை 4 மணி FDFS ஷோ உள்ளதா இல்லையா என்பது தெரியாமலும் குழப்பத்தோடு வலம் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











